உயிர் ஒன்று மட்டுமே!
ஊசலாடும் நிலையில்!
ஒட்டிக் கொண்டிருக்க,!
கால்களுக்குக் கூட!
போக்கிடம் இல்லாமல்!
கவலைகள் மலையாய்க்!
கனத்துக் கிடக்கும் மனது.!
முட்களே இங்கு!
ரோஜாவைக் குத்திக்!
காயப் படுத்திக் !
கசக்கிப் பிழியும் நிலையில்,!
இடுப்புக்கு மேல் துணியின்றி!
எல்லோரும் காந்திகளாய்...!
சுற்றம் என்பதே புதிராகி!
முற்றும் துறந்த கீழ்நிலையில்!
ஒட்டுமொத்த இனமே!
ஒடுங்கிப் போனது.!
உலகத்தில் தமிழுக்கு!
உயிர் கொடுத்த கூட்டம்,!
இனபேதத்தைப் பயிராக்கி!
ஈனத்தை வளர்க்கும்!
சர்வாதிகாரச் சாக்காட்டில்!
சதிராடித் திணறுகிறது.!
புத்தனைக் கூடத் தனது!
போதனைகளில்!
பொல்லாங்கு தெரிகிறதா என்று!
திருப்பிப் பார்க்கவைக்கும்!
வெறுப்புகளைச் சுமந்தவர்கள்!
விதைத்த வினை இன்று!
வேதனைகளை விளைச்சலாக்கி!
வேரூன்றி நிற்கிறது
சித. அருணாசலம்