தற்காலிகமான பிரிவுகளிலும் கூட!
பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தையாய்!
அடம் பிடித்திருக்கிறது என் மனசு....!
நிரந்தரமானதோர் பிரிவிலோ!
முதியோர் இல்லத்தில் தந்தையை!
விட்டுச்செல்லும் மகனைப்போல!
இரக்கமற்றதாக இருக்கிறது உன் மனசு...!
கல்லென்று தெரிந்தும் கடவுளை!
நம்பும் பக்தனை போல!
பித்தனாயிருக்கிறது என் மனசு...!
-ராமசுப்பிரமணியன்

ராமசுப்ரமன்யன்