அர்த்தமிழந்து போன அர்த்தங்கள் - நேற்கொழுதாசன்

Photo by Jr Korpa on Unsplash

நிலாக்கரையும் பொழுதொன்றில் !
உலர்ந்த உதடுபிரித்து !
பேசத்தொடங்கினேன் !
ஒலிக்குறிப்பற்ற சொற்களால். !
நிசப்தமுடைக்கும் !
மிக நிசப்தமாய் !
மிதக்கத்தொடங்கின அர்த்தங்கள் .!
இலையில் பின்னிய வலைக்குள் !
இறந்துபோன புழுவாய் !
உக்கத்தொடங்கியது மனம் !!
இடைவெளிகளை !
முரண்களால் நிரப்பி!
இணைப்புக்களை தயக்கங்களால் !
சோடித்துத்திரும்பியபோது, !
வறண்டு வெடித்துப்போயிருந்த!
மனதேசத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்!
விதைகளை எரித்து கருக்கின ..........!
மரண ஊர்வலம் போன !
பாதையில் நிலைத்திருக்கும் வாசம்போல் !
படர்ந்திருக்கிறது உள்ளுக்குள் !
காயத்தின் ஊனநீர் நாற்றம் !
ஒடுங்கி !
ஒன்றுமில்லாத ஒன்றாக !
மீண்டும் மீண்டும் !
ஒடுங்கி கொள்கிறது !
இந்த நாட்கள் மீதான இருப்பு !
மெல்ல மெல்ல !
கரைந்து மறைகிறது நிலவு !
அர்த்தங்கள் எல்லோராலும் !
பகிரப்படுகின்றன பெருமூச்சுக்களாக !
அவளிடமிருந்தும்
நேற்கொழுதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.