நீலப்பச்சையாய் நீளப்பரவிய!
பசுமைகளின் ஆழங்களூடே!
உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட !
மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே !
தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள் !
சில்லெனும் குளிரோடை மறைத்தபடி அனல் சொரிகிறாய்!
எரிந்து பிடித் தூசாவோமெனப் பயந்தொதுங்குமிவர்!
கால்தடம் விலக்கி விலக்கிப் பயணப்படுகிறேன்.!
கிரகங்கள் தனித்தியங்கத் தொடங்கு முன்பான!
ஆதிக்கனலில்!
இழை திரித்து சிறகு முடித்தே!
காலத்தைச் சுருட்டிக் கைப்பைக்குள் புதைத்தபடி!
ஏழுபூமி ஏழுவானம்!
தாண்டித் தாண்டிப் பறக்கிறேன் !
ஒளிந்திருக்குமக் குளிரோடைக்குள்!
செட்டைகள் விறைக்க விறைக்க நீந்திக் களித்தபடி !
என்றென்றைக்குமா யதில்!
தங்கிவிடத் துடிக்குமொரு சிறுமீனாய்
கிண்ணியா பாயிஸா அலி