கடைசி இருக்கை.. மிதந்து வரும் நுரைப்பூவாய்.. சிட்டுக்குருவியே... என் சிட்டு குருவியே…..!!
01.!
கடைசி இருக்கை !
----------------------!
மொழிபெயர்க்க முடியாத கிறுக்கல்களோடும்!
சிறு உடைசல்களோடுமாய்!
எல்லா வகுப்பறைகளுக்குள்ளும்!
உட்கார்ந்திருக்கிறது!
ஒரு கடைசி இருக்கை.!
எண்ணெய் வரண்டும் செம்மை கலைந்துமான!
பரட்டைத் தலையோடும்……!
சொட்டுநீலம் சீராய் பரவிடாத!
சுருக்கம் கலைந்திடாத சீருடையோடும்…!
நிறமுதிர்ந்தும்!
பளபளப்பு கரைந்ததுமான சூக்களோடும்….!
பாதிசோகமும் மீதிமுரட்டுப் பிடிவாதமுங் கலந்த!
முகமணிந்தபடியுமாய்….!
எப்போதுமேயதில் புதைந்திருக்கிறான்!
அக்கதிரையின் சொந்தக்காரன்.!
இதுவரை அணையாதெரிந்த!
இனவன்முறையின் ஏதாவதொரு கிளைத்தீயிலோ!
இல்லையேல் வேறெத் தழலிலுமோ!
பொசுங்கிப்போன தம் வாழ்வெண்ணியே!
பேதலித்துக் கிடக்கிறாளோ!
அவனது விதவைத்தாய்.!
கூரையில் மிதக்கும்!
நிறைவேறாக் கனவுகள் யாவையுமே!
ஒரேயொரு அதட்டலுக்குள்!
புதைத்தவாறே பதகளிப்போடு!
கிளரத் தொடங்குவான்!
ஸிப்பறுந்த தனது புத்தகப்பையை!
குடியிருப்பிலிருந்தும் !
மிகத்தூரமாய் முளைத்திருக்குமொரு!
எல்லைப்புறக்குடிசைபோலவே!
எல்லா செயற்பாடுகளிலும் !
தன் சகபாடிகளை விட்டும்!
ஒதுங்கியே நிற்கிறான் அல்லது!
ஒதுக்கப் பட்டிருக்கிறானவன்.!
இவ்வாறே !
ஒவ்வோர் பாடவேளையிலும்!
பின்னூட்டலுக்கும் விசேட பரிவுக்குமான!
தன்னிலைப்பாட்டினை!
மருளும் விழிகளினூடே!
ஒழுகவிட்டபடி!
அன்பையும் கருணையையும்!
அவாவி நிற்குமோர்!
பிஞ்சு இதயத்தை!
எப்போதுமே சுமந்தபடி!
எல்லா வகுப்பறைக்குள்ளும்!
உட்ககார்ந்திருக்கிறது!
ஒரு கடைசி இருக்கை!
கிழிந்த சிப்புடனோ அல்லது!
பொத்தான் அறுந்த சட்டையுடனோ. !
02.!
மிதந்து வரும் நுரைப்பூவாய்..!
-------------------------------------!
போவதா விடுவதாயென !
இடைவிடாதடித்த எண்ண அலைகளினூடே !
சரி போவோமெனக் கரையொதுங்குது மனசு. !
அதிதியுரை ஆய்வுரை !
நயவுரை நன்றியுரையென !
விரிகிற உரையலைகளினூடே !
மிதந்து வருகிற நுரைப்பூவாய் !
நான் மட்டுமே காணுகிற உன்னோடு !
பேசவே விரும்புதது !
எல்லாமும் முடிந்து நூலோடு வீடேகிய வேளையிலும் … !
அங்கே தொடங்கிய சிடுப்பான சிணுங்கலை !
இங்கேயும் தொடர்கிற சின்னவளுக்கு !
ஆடைமாற்றுகிற வேளையிலுங் கூட !
ரசித்தவை பிடித்தவை !
முகம் சுழித்தவையென்றாகிய !
ஒருநூறு சேதிகளையும் !
பகிர்ந்திடவே ஆதங்கிக்குதது. !
நிலா, நட்சத்திரங்களின் !
சன்னமான குறட்டையொலிகள் தவிர !
மற்றெல்லாமுமே மௌனித்துக் கிடக்கிற !
இந்நிசியின் நிசப்தங்களுக்குள் !
தற்செயலாய் விழித்துக் கொண்டு !
தனிமைப் படுகையிலே … !
அட சற்றுமுன்னமாவது பேசியிருக்கலாமோவென !
மறுபடியும் முணுமுணுக்கத் தொடங்குதது !
மிக அருகிருந்தும் …. !
ஒரு புன்னகைதானும் !
பூக்க மறுக்கும் உன்னோடு.!
!
03.!
சிட்டுக்குருவியே... என் சிட்டு குருவியே…..!!
---------------------------------------------------!
இப்போதெல்லாம்….. !
முற்றத்துப்பூமரங்களும் குப்பைகூளங்களை !
உற்பத்திப்பதேயில்லை. !
ஷம்பூ மணக்கும் குளியலறைத் தரைவிளிம்புகளி;ல் !
அழுக்குப் பாசிகளோ வளருவதேயில்லை. !
துவைக்காத துணிகள்கூட !
சலவைத்தூள் விளம்பரத்தில் மடமடக்கும் !
அழுத்திமடித்த ஆடைகளாய்…. !
அலம்பாத பாத்திரங்களும் பளபளப்பில் !
நட்சத்திரங்களை வென்றபடி… !
இப்போதெல்லாம்….. !
சமைக்காத சட்டிபானைக்குள்ளும் !
கறிவேப்பிலையும் ஏலமும் கமகமக்கும் கறிசோறு !
ஈரத்துணியுரசாத தரையோடுகளிலும் !
படிவதாயில்லை தூசுத்துணிக்கை !
இப்போதெல்லாம்….. !
புதிதாய் அணிந்தும் அள்ளிப்போட்டுக் கொண்டுமான !
மாலைநேரப் பயணங்களிலெல்லாம் !
மனசு இஸ்டப்படுவதேயில்லை !
மேசை இழுப்பறைக்குள் வாரப்பத்திரிகையின் !
கவிதைப்பக்கங்களை நறுக்கிப; போடத் தோணுவதுமில்லை !
இணையத்தில்கூட புதிதாயொன்றும் !
இணைப்பதாயுமில்லை !
சின்னத்திரைகளுக்குள் !
மூக்குச்சிந்திக்கூட வெகுநாளாச்சு. !
வழிபாடும் அது சார்ந்தவையும் தவிர்ந்து !
முழுநாளின் தேடலுமே உன் !
ஒற்றைப்பைக்குள்ளேயே ஒடுங்கிப்போனதா..? !
சிட்டுக்குருவியே…சிட்டுக்குருவியே… !
வெண்பஞ்சு மேகங்களை இறகாயணிந்தே என் !
மனசு முழுக்கச் சிறகடிக்குமென் !
சின்னக்குருவியே..கொஞ்சம் வாயேன். !
இன்றைய உன் வகுப்பறைக்குள் கடைசிமணி !
எப்போது ஒலிக்குமென சொல்லிவிட்டுப் போயேன்
கிண்ணியா பாயிஸா அலி