வாழ்க்கை என்பது… - செண்பக ஜெகதீசன்

Photo by FLY:D on Unsplash

காதல் தோல்விகளும் !
கடன் தொல்லைகளும் !
கயிற்றை மாட்டவைக்கின்றன !
கழுத்தில்.. !
காலம் முடியுமுன்னே !
காலனை வரவைப்பது !
கையாலாகாத்தனமல்லவா.., !
ஊனம் உள்ளவன்கூட !
உயிர்வாழும்போது !
தானே உயிரை மாய்ப்பது !
தலைகுனிவல்லவா !
உன்னைப் படைத்தவனுக்கு.. ! !
விலைமதிப்பில்லா உயிரை !
விடைகொடுத்து அனுப்பவேண்டாம், !
கடமையைச் செய்தால் !
கலங்காது செய்தால்.. !
விலங்கல்ல வாழ்க்கை, !
விபரம் புரிந்தால் !
விலகும் திரைகள், !
இலகுவாய் வெற்றி !
இனிதாய் உனக்கு, !
இல்லைநேரம் சாவை நினைக்க.. !
வாழ்க்கை என்பது !
வாழ்ந்திடத்தானே…!!
காத்திருந்து… !
இந்த !
ஜன்னலோர ஜானகிகள் !
காத்திருக்கிறார்கள், !
வருவான் ராமன் !
வரதட்சணை வில்லை !
உடைப்பானென்று…! !
வரும் ராமர்களெல்லாம் !
தேடிக்கொண்டிருக்கிறார்கள் !
தங்க வில்லை…!!
--செண்பக ஜெகதீசன்…!
()
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.