கவிதை ! இன்பக்கவிதை !!
கவிதை எழுத வருமா !!
என் மனது முழு அமைதி!
இன்று பெறுமா!!
சோர்வில் மிதந்து கிடக்கும்!
என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா!!
காற்று சுகமிருந்தால் உள்ளே!
சுவாசத் தடங்கலிருக்கு!
சுவாசம் ஒழுங்கடைந்தால்!
வெளியே காற்று அடங்கி இருக்கு !
மலர்ந்த கனவுக்கெல்லாம் என்!
மனம் வாடகை கேட்டிருக்கு!
இன்று மனமே வாடகையாய்!
கனவில் புழூங்கியிருக்கு..........!
தூக்கம் எனக்கிருந்தால்!
இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை!
ஏட்டில் கிறுக்குவதால் என்மனம்!
தூக்கம் கொண்டதில்லை !
துக்கம் எனக்கிருந்தால் அதை!
ஏட்டில் இறக்கியிருப்பேன்!
மன வாட்டம் போக்கியிருப்பேன்!
விழி தூக்கம் கொண்டிருப்பேன்!
துக்கமில்லை! தூக்கமில்லை!!
எதுவுமின்றி நான் சோர்ந்து கிடக்கிறேன்!
நெஞ்சம் வேர்த்துக் கிடக்கிறேன் !
கண்ணீர் கோர்த்து கிடக்கிறேன்!
கவிதையில் பூத்துக் கிடக்கிறேன்!
சோற்று பருக்கைத்தனை வாயில்!
போட்டுக் கொண்டப் பொழுது!
உழவன் வாட்டம் என் மனதில்!
தாக்கம் கொள்கிறதே!
வாழ்வு முழுவதிலும்!
மன புழுக்கம் எதுவுமின்றி !
வாழ நினைக்கையில்!
வருத்தம் வாசல் முன் வருதே!
தேடி திரிகையில் அன்பே!
முதலென முடிவும் தெரியுதே!
காத்துக் கிடக்கிறேன் அன்பினை!
சுவாசம் நுழைக்ககவே!!
அதில் இன்பம் தெரியவே!
ஏட்டில் கிறுக்கல் நிறையுதே!
சொல்ல நினைத்ததை ஏட்டில் !
கிறுக்கிப் பார்க்கிறேன்!
சோர்வு எனக்கிருந்தால் அதனுடனே!
கொட்டித் தீர்க்கிறேன்--!
நிறைவில் வருவதையே கவிதை !!
இன்பக்கவிதை! என்கிறேன்....... !
-- தமிழ் ராஜா
தமிழ் ராஜா