சர்க்கரை - இமாம்.கவுஸ் மொய்தீன்

Photo by FLY:D on Unsplash

இனிப்பானது!
சுவையானது!
அனைவருக்கும்!
பிடித்தமானது!!
லட்டு பூந்தி!
மைசூர் பாக்!
அல்வா பழங்கள்... எனப்!
பற்பல உருவங்களில்!
உலா வருவது!!
விருந்தோம்பலும்!
மங்கல நிகழ்ச்சிகளும்!
இவை யன்றி!
இருப்பதில்லை!!
தன் இனிப்பாலும்!
சுவையாலும்!
தானோர் 'கொடூரன்'!
என்பதை உணராது!
செய்து விடும்!
தன்மை மிக்கது!!
ஒருவர்!
தன் வாழ்நாளில்!
உட் கொண்ட!
சர்க்கரைத் துகள்களைக்!
காட்டிலும்!
அது உட்கொண்ட!
மனித உயிர்கள்!
பற்பல மடங்கு!!
'இன்சுலின்'!
சுரப்பின் குறைபாடே!
இந் நோய்க்குக் காரணம்!!
உடனே உணர்ந்து!
செயல்படா விட்டால்!
விழிகள்!
சிறுநீரகங்கள்!
இதயம்!
மூளை!
நரம்பு மண்டலமென!
ஒவ்வொன்றாய்ப் பாதிக்கும்!!
உடலில் தொன்றும்!
சிறுபுண் பெரிதாகும்!
பீடித்த பகுதியைச் !
சிறுகச் சிறுக!
அரிக்கும்! அழிக்கும்!!
அழிந்த பகுதி!
பகுதி பகுதியாய்!
தவணைகளில்!
வெட்டி எடுக்கப்படும்!!
இறுதியில்!
உயிருக்கே உலைவைக்கும்!!
சர்க்கரையுடன்!
பகைமை.....!!
நலம் காக்கும்.!
உறவு......?!
நலமும் வளமும்!
நிம்மதியும் அழிக்கும்!!
ஆன்மாவைச் !
சாந்தி அடைய வைத்தே!
அது சாந்தி அடையும்!!!
இமாம்.கவுஸ் மொய்தீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.