வசந்தம் வாடை!
அனல் புயல்!
சூறாவளி புழுதிக்காற்றெனப்!
பருவத்துக்குப் பருவம்!
பற்பல அவதாரங்களில்...!
பிராணவாயு !
கரியமிலவாயுவென!
உயிரினங்களுக்கும்!
தாவரங்களுக்குமிடையே!
சுவாசப் பரிமாற்றத்தில்...!
காடுகளின் அழிப்பு!
இரசாயனங்களின்!
வெளியேற்றம்!
தூசு மாசுகளின்!
ஆதிக்கத்தால் இன்று!
நச்சு பரப்பும் நிலையில்...!
காற்றின் !
கனிவும் சீற்றமும்!
பாகுபாடு பார்ப்பதில்லை!
கனிவுடன் இருக்கும் வரைதான்!
கண்ணியத்துடன் இருக்கும்...!
உணர்ந்துகொள் மனிதா...!!
இதன் இதமும்!
இனிமையும் இன்பமும்!
இலக்கியங்கள் கதைத்திடும்!!
சினமும் சீற்றமும் கடுமையும்!
வரலாறு உரைத்திடும்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்