அணுகுண்டு வார்த்தைகளைக்
கக்கியே பழக்கப்பட்ட
என் பேனா பீரங்கி
ஏன் இன்று பூக்களைச்
சொரிய எத்தனிக்கிறது?
யாராலும் சலனப்பட்டு
போகாத என் இதயம்
இருக்கும் இடம் விட்டு
எங்கேயோ போய்
வந்து கொண்டிருக்கிறது.
காதலுக்கும், நட்புக்கும்,
இனக் கவர்ச்சிக்கும்
இலக்கணம் சொல்லி
வந்த நான்
ஏன் இன்று ஏதோ
ஒன்றுக்கு இலக்கணம்
புரியாமல் இருக்கிறேன்?
எவர்க்கும் அஞ்சாத
என் எழுத்துக்
குழந்தைகள் கூட
இன்று எழுந்து நிற்க
சக்தியின்றி சோர்ந்துவிட்டன.
இல்லை இதுவல்ல நான்.
பூக்களைத் தூவ பூமியில்
வேறு பல பேனாக்கள் உள்ளன.
என் எழுத்துக்கள்
மின்சாரம் பாய்ச்சவே
பிறந்தவை.
நிச்சயமாக...
நான் சலனமற்றவன்
எட்வின் பிரிட்டோ