அந்த குட்டிப் பெண்ணின்
சிரிப்பில் அப்படி என்னத்தான்
இருக்கிறதோ தெரியவில்லை
கொள்ளைக் கொள்ளையாய்
அவள் வெள்ளைச் சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொள்ளையடித்துக்
கொண்டு போய்விட்டாள்
அவள் ஒவ்வொரு முறை
மலர்ந்த போதும் என் மனதில்
ஈரமாய் ஒன்றிரண்டு பனித்துளிகள்
அவள் வாய் நிறையச் சிரிக்கும்போதுதான்
மகிழ்ந்திருத்தலின் மகத்துவம் புரிகிறது
என்னச் செய்வது...? கேட்கும்போதெல்லாம்
பூ பூத்துச் சொரிய சிலருக்கு மட்டும்தான்
வாய்த்திருக்கிறது!
ஒவ்வொரு புன்னகையின்
முடிவிலும் நான்தான்
உடைந்துபோனேன்
அந்த நொடி அப்படியே
உறையாதா என்ற
எதிர்பார்ப்பிலும்...
மீண்டும் அந்த நாட்கள்
எனக்கும் வாய்க்காதா
என்ற ஏக்கத்திலும்

எட்வின் பிரிட்டோ