தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
வாழ்த்துச் சொல்லாத பிறந்தநாள் - க.அருணபாரதி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
வாழ்த்துச் சொல்லாத பிறந்தநாள் - க.அருணபாரதி
Photo by
Jorge Zapata
on
Unsplash
இன்று!
உன் பிறந்தநாள்..!!
உன்னை சந்தித்த!
முதல் வருடத்திலிருந்து!
கடைசி வருடம் வரை!
தவறாமல் நள்ளிரவில்!
கைப்பேசியில் பேசி!
வாழ்த்துச் சொல்வேன்,!
உன்னிடம்..!!
வாழ்த்துக்களை!
வாங்கிக் கொண்டதற்கு!
பதிலாக வார்த்தையால்!
மட்டுமல்லாமல்!
புன்னகையாலும்!
நன்றி சொல்வாய்!
என்னிடம்..!!
இன்று நிலைமைகள்!
எல்லாம் தலைகீழாய்!
நிற்கின்றன...!
என்னைப் போல..!
உனது திருமண!
சடங்கோடு!
என் காதலின்!
இறுதிச் சடங்கும்!
சேர்ந்து நடந்தேறி!
பலமாதங்கள் ஆகிறது..!
எங்கு கைப்பேசியி்ல்!
இவ்வருடம் உன்னிடம்!
வாழ்த்து கூறிவிடுவேனோ!
என்றெண்ணி கைப்பேசியை!
செயல்படாமல்!
அணைத்துவிட்டாய்..!!
என்னுடைய வாழ்த்து!
மட்டுமல்லாமல்!
யாருமே உன்னிடம்!
வாழ்த்து சொல்ல!
முடியாதவாறு!
தடுத்துவிட்டதை எண்ணி!
வருத்தம் கொண்டது!
உள்மனது..!
கைப்பேசியில் சொல்ல!
நினைத்த வாழ்த்தை!
கரங்கள் உள்வாங்கி!
எழுத்தாணியால்!
எழுதியது!
கவிதையானது..!
காலவெள்ளத்தில்!
காணாமல் போக!
காதல் மேகமல்ல..!
காற்று..!
உள்ளிருந்து கொண்டே!
நம்மை இயக்கிக்!
கொண்டிருக்கும்,!
உயிர் பிரியும் வரை..!
கணவனுடன் வாழ்வது!
நீ தானே தவர!
கவிதைகளுக்கு!
பிறப்பிடமான!
என் காதலி அல்ல..!
-க.அருணபாரதி
க.அருணபாரதி
Related Poems
நினைவுகளின் சுமை
ஒரு திருமணவிழாவில்
பொங்க வேண்டியது எது
நினைவுப்பூக்கள்
புரிந்தது புரியாமல் போனது
முதலாய்க் கண்டேன்!
மாமிச உருவங்கள்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.