நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by FLY:D on Unsplash

விடிகாலைத் தூக்கம்,!
மழைநேரத் தேனீர்,!
பிடித்த செடியின் புதுமொட்டு,!
புதுப்புத்தகக் காகிதவாசனை,!
இமைதடவும் மயிலிறகு!
மேலுரசிடச் சிலிர்க்கும் !
ரோமமெனச் சுகமாய்!
எனை ஏதும் செய்யவிடாமல்!
நீ வந்து நிரப்புகிறாய்!
எனதான பொழுதுகளை !!
மூங்கில்களுரசிடக் !
குழலிசை கேட்குமோ...?!
உன் மொழியில்!
தினம்தினமொரு இசை!
எனைக்கேட்கச் செய்கிறாய் !!
புருவம் தடவப் பூஞ்சிரிப்பு!
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;!
சிவந்த அழகுக் கன்னமென்!
அழுத்தமான முத்தத்தில்!
நிறம் மாறி நீலம்பூக்கும் !!
விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென!
விழித்திருந்து அலைபாய!
என் தூக்கம் கரைத்துக்குடித்து!
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;!
உன்னிமையில் துயில் வளர்க்க!
என் பொறுமை சோதிப்பாய் !!
எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்!
அத்தனை பதற்றங்களையும்!
நானறியச் செய்தாயென்!
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்!
நீ வந்து அழுதாய் ;!
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!!
-- எம். ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை.!
---------------------------------- !
M.Rishan Shareef,!
Hemmathagama road,!
Mawanella,!
Srilanka
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.