பாவனைகளும் தோரணைகளும்!
எங்கோ கண்டதின் சாயலில்!
வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும்!
நம் நிழல் போல்!
சுவர்களை மீறி வரும் ஒலி!
அறையின் வெக்கையாய்!
அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள்!
உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல்!
ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை!
விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி!
கனல் நீரில் தத்தளிக்கும்!
துடுப்பற்ற பொத்தல் படகாய்!
என் அன்னியோன்யத்தில் உலவும்!
எனக்கே அல்லாத உறவின் முகம்!
எப்போதுமே கதைத்திருக்கும்!
தான் கரைந்ததும் கனத்ததுமாய்!
கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி!
செவிகளில் பதியும் போது!
போதுமென்ற மனமே பொன் செய் மனமாய்!
அகழ் குழியில்!
தனியனாய் நானும் என் எண்ணங்களும்

சு.மு.அகமது