சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று
பேரலையின் ஆரவாரம்
தலையாட்டும் பெருந்தருவின்
எதிர்வினை செயலற்றுப்போய்
மென்னியம் உதிக்கிறது
படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்
ஆரம்பம் இப்படித்தான்...
புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க புசியப் பழகினதாய் ..
சுவைத்துப் பழகினவை
செறித்துப் போனதால்
திளைத்துப் போகும்
அதன் உலைகள்
தெறிக்கும் துளிகளில்
நான் பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு
விந்தையின் மேலணியில்
நான் கற்றேன் நீ கற்பித்தாய்
'கற்ப'து’ பொதுவானது
சு.மு.அகமது