அதிகாலை 4 மணிக்கு குரைக்கும்!
நாய் குரைக்கிறது!
அடுத்த நொடி வரப்போகும் திருடனுக்காக!
இல்லாவிடிலும்!
குறைந்தபட்சம் குரைக்க வேண்டியிருக்கிறது!
ஒரு நாய் என்பதற்காக!
மேலும் அது அறிவுறுத்தப்பட்டிருக்கிறது!
குரைத்துக்கொண்டே சாப்பிடவும்!
குரைத்துக்கொண்டே ஓய்வு கொள்ளவும் கூட!
குரைப்பதால் வரும் தொண்டை கமறலுக்கு!
ஒரு விக்ஸ் மிட்டாயை!
குரைத்துக்கொண்டே நாசூக்காய்!
சப்புவதையெல்லாம்!
அறியாத அந்நாயிடம்!
எஜமானன்!
இனிமேல் குரைத்துக்கொண்டே குரைக்க வேண்டும்!
என்ற ஓர் நாளில்!
அது!
'ஙே' என்று விழிக்கிறது குரைத்துக்கொண்டே!
முக்காமல் முனகாமல்!
சாகாமல் சீராக!
குரைத்தபடியேயிருக்க வேண்டுமென்ற!
கட்டளைக்குப் பிறகே!
அது கற்றுக்கொள்கிறது!
குரைத்துக்கொண்டே குரைப்பதெப்படியென!
அது முதல்!
அந்நாய்!
அதிகாலை 4 மணிக்கு குரைக்கிறது!
அதிகாலை 4 மணிவரை!
தினமும்

சம்பு