தூர தேசத்துப் பறவையின் வருகையால்
குதூகலிக்கும் மனது
பொழுதுகளில்
தொட்டியில் வளர்க்கும் மரமாய்
முடக்கிப் போடுகிறது உணர்வை
விரிசலுற்ற மண்குடமாய்
விரயமாகும் சிலதில்
கசிகிறது இயலாமை
கடக்கும் போது இல்லாதது
கடந்த பின்பு துளைக்கும்
ஈயத்துண்டின் கழிவாய்
தங்கிப்போகும் வாசம்
மறக்கும் முன்பேயே
எங்கோ புள்ளியாய் மறைந்துப்போகும்
மிச்சத்திலெழும் ஆவி
புரட்டிப்போடும் நினைவுகளில்
பதிந்து முளைக்கிறது இளங்குருத்தாய்
ஓர் ஈர்ப்பு
சூட்சுமதாரியின் முடிச்சவிழும் போது
புதிதாய் உதிக்கிறது
உறவின் மீதான உறவு
சு.மு.அகமது