வானத்தில் சத்தம் கேட்டு!
மழை வரப் போகிறதென்று!
மனம் மகிழ்ந்துவிட முடியாது.!
இடி இடிக்கும், குண்டு மழை பொழிய.!
இனம் துடிக்கும், வேதனையை அறிய.!
பதுங்கிப் பாயும் கூட்டமொன்று!
பாதுகாப்பென்று நினைத்ததெல்லாம்!
பாதியிலே போன கதையானது.!
பார்த்துக் காத்தவர்களுகே இன்று!
பாதுகாப்பு தேவைப்படுகிறது!
புல்லுருவிகளின் புகலிடமும்,!
புகுந்து விளையாடும்!
நரிகளின் நயவஞ்சகமும்!
தமிழின் செல்வர்களைத்!
தலை தெறிக்க விரட்டுகிறது.!
உழுது விவசாயம் பார்ப்பதெல்லாம்!
உறக்கத்தில் வரும் கனவாகிப் போனது.!
பாசத்தை மனங்களில் பதிப்பதற்கு!
பக்கத்தில் உறவைத் தேடவேண்டியுள்ளது.!
பாதத்தை மண்ணில் பதிப்பதற்குப்!
பயப்பட வேண்டிய நிலைமையானது.!
அமைதியை அடுப்பிலே போட்டுவிட்டு,!
புறாவைப் பொசுக்கித் தின்றுவிட்டு,!
சமாதானப் பேச்சில்லை என்று!
சட்டையைத் தூக்கிவிடுவோ ரெல்லாம்!
அட்டையாக அரசு இயந்திரங்களில்!
ஒட்டிக் கொண்டிருக்கும் போது,!
மனிதாபிமானம் தழைத்திடுமா - அதில்!
மனித உரிமைகள் மலர்ந்திடுமா?!
-சித. அருணாசலம்
சித. அருணாசலம்