உனக்குள்
உன்னை தொலைத்து விடு
தவறு ஒன்றும் இல்லை
சில காலம்
முகவரி அற்றி திரிவாய்
ஊர் உன்னை
பித்தன் என்று கூறும்
இருப்பினும்
உன்னை வென்று விடுவாய்
உன் நிழலை ஒட்டியே நடப்பாய்
உன் உள்ளங்கை
உனக்கு உரமாக அமையும்
தலையெழுத்து அழிந்தே போகும்
அச்சத்தை கழற்றி எரிவாய்
நிலம் உன்னை சுமக்கும் வரை
நிம்மதியுடன் கண் அயர்வாய்.....
செ.இராமதனவந்தினி