நீ நலமாயிருக்க!
நான் நலமாயிருக்கின்றேன்!
நான் நலமாயிருக்க!
நீ நலமாயிருக்கின்றாயா?!
சீதனமாய்த்தானே கொடுத்தோம்!
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்!
பாகப்பிரிவினைனு!
சொல்லிவிட்டார்கள் பாவிகள்!
நம்முடைய பலத்தை!
அன்பைவைத்து அளப்போம்!
அணுகுண்டுகளை!
வைத்து வேண்டாமே!
நம் நாட்டின் எல்லையில்!
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்!
ஒட்டை விழுவது என்னவோ!
நம் இதயத்தில்தானே!
உன் தேசம் தண்ணீரில்!
மூழ்கியிருந்த போது!
நான் கண்ணீரில்!
மூழ்கினேன்!
உன்மேல் என் அன்பையும்!
என்மேல் உன் அன்பையும்!
சிந்துவும் பிரிக்கமுடியாது!
இந்துவும் பிரிக்கமுடியாது!
நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்!
நான் எப்படி வாழ முடியும்!
ஜெய் பாகிஸ்தான்!
ஜெய் இந்தியா
பால்ராஜன் ராஜ்குமார்