வாழ்வின்
விளிம்பில் நிற்கும் போது கூட
ஒரு குரல்
உன்னை ஒடிக் கொண்டே இருக்க
சொல்லும்
அது உன் வீட்டின் மூலையில்
நீ வெகுநாளாய் எதிர்ப்பார்த்த
செடியின் பூவில் இருந்து வரலாம்...
உன்னை சிறிது நேரம்
உற்சாகத்துடன் உபசரிக்க வரும் மழைத்துளியாகக் கூட இருக்கலாம்
மறுத்து போன உன்னை
தட்டி எழுப்பும் சூரியனிடம்
இருந்து வரலாம்
பல காலம் நினைவில்
இல்லாத பாலிய நினைவுகளை தூசி தட்டும் போது கூட வரலாம்
நாளை அற்ற உலகில்
சிரித்து விளையாடும்
மழலையின் தொடுதலில் கூட வரலாம்
பிடித்த புத்தகத்தின் ஒரு வரியில்
இருந்து கூட வரலாம்
சற்றும் எதிர்ப்பாராத அலைபேசி
அழைப்பின்
மறு முனையில் நம்மை நேசிக்கும்
குரலாக இருக்கலாம்.....
எதுவாகவும் இருக்கட்டும்
மீண்டும் உன்னை
வாழ்வில் இணைத்துக் கொள்ள
அரவணைக்கும் அனைத்து
குரல்களும்
ஆராதிக்கப்பட வேண்டியவையே!!!
செ.இராமதனவந்தினி