வறண்டு போய்க்கிடப்பது!
பாலை அல்ல!
முல்லை!!
கரிந்து கிடப்பது!
உப்பால் அல்ல!
உதிரக் குழம்பால்!!
எங்கும் இருள்!
இரவால் அல்ல,!
பகைமையால்!!
கடவுள்கள்!
இருப்பதாகவே இருந்தாலும்!
இங்கு வர மாட்டார்கள்.!
இது சபிக்கப்பட்ட பூமியா?!
நாங்கள் மட்டும் நரகுழல்வோரா?!
யார் செய்த சட்டம் இது?!
இன்னும்!
விதைக்க வேண்டிய!
விதைகளே ஏராளம் இருக்க!
அறுவடையை!
அரிவடையாய்!
யார் செய்தது?!
கனவைக் கலைப்பதாய்!
எண்ணிக் கொண்டு!
கருக்களைக் கலைக்க!
யார் தந்தார் உரிமை?!
இன்னும் பொறுத்திருப்போம்!
சத்தியத்தின் மீது!
தளராத நம்பிக்கை!
எங்களுக்கு எப்போதும்!
நிறையவே உண்டு!!
மீண்டும் ஒரு மழைக்காலம்!
எங்கள் பூமிக்கு வரும்.!
அப்போது நாங்கள்!
விருட்சமாய் எழுவோம்.!
எங்கள் நிழலில்!
நீங்கள் இளைப்பாறவும்!
அனுமதிப்போம்!!
உங்கள் ஊர்ப் பறவைகள்!
எங்கள் கிளைகளில்!
கூடுகள் கட்டவும்!
கொஞ்சிக் குலாவவும்!
அனுமதிப்போம்.!
இருக்கிறோம் தோழர்களே!
இன்னும் உங்களுக்காகவே
அருணன்