கறையும் நல்லது!
என்னும் காலத்தில்!
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.!
எல்லாம் நிறைந்த!
இந்த உலகத்தில்!
எல்லாம் அறிவே என்று!
அறிந்தும் கொண்டிருக்கிறோம்.!
ஒழுக்கம் என்பது!
ஊர்களுக்கு ஒன்றாய்!
சட்டம் என்பது!
அவரவர்க்கு வேறாய்!
கடை(சியில்தான்) பிடிக்கிறோம்.!
என்வழி தனிவழி!
அவன் வழி பொதுவழி!
எல்லா வழிகளிலும்!
சுகம் தேடுகிறோம்.!
உலகம் எல்லாமாய்!
உருமாறும் வேளையில்!
எல்லாமே இங்கே!
உலகத்தின் சாயல்தான்.!
கண்டதும் கற்று!
களவையும் சேர்த்தே!
பண்டிதப் பட்டங்கள்!
வாங்கவும் செய்கிறோம்.!
எப்பொருள் யார்யார்!
வாய் கேட்பினும்!
அப்பொருள் மெய்ப்பொருள் !
என்பது அறிய!
செய்தித்தாள் அல்லது!
தொலைக்காட்சி வேண்டும்.!
அப்பொருள்!
அருகே ஆனாலும்.!
போக்கவே பொழுதுகள்!
துய்க்கவே வாழ்க்கை!
பொய்க்கும் மரணம்!
கனவினில் மட்டும்.!
நல்லதே நடந்தது!
நல்லதே நடக்கும்!
நடந்து கொண்டிருப்பது மட்டும்!
நல்லதாய் இல்லை!
இறுதியாய் இது!
யாவர்க்கும் பொதுவாய்!
தீண்டத் தகுந்ததும்!
தீண்டத் தகாததும்!
தெய்வமே என்பதை !
அறிந்து கொண்டால்!
உலகம் நம் வசமாகும்
அருணன்