முட்சடங்குகள் பிண்ணிய!
சாமுதாய சிறைகளின்!
கைதிகள்!
நீயும்..!
நானும்...!
வெப்ப ஆற்றாமை பொங்கும்!
விழி பெருவெள்ள வழக்குக்கு!
இருள் ஊறிய துணியும்!
துருப் பூத்த தராசும்!
ஏந்தி!
தீர்ப்பு இயம்ப!
நீதி மன்றங்களால் இயலாது..!
சாதியை மோகித்து!
மத வேட்கையில் புணர்ந்த!
பெற்றவர்களுக்கு!
உணர்ச்சி மீறாத நேசிப்பின்!
உட்தூய்மையை!
உருக்காண தெரியாது..!
முட்டுக்கட்டைகளை முட்டைப்போடிகிற!
முதிர் தலைமுறைகளின்!
தொப்பைக் குழியில்!
தீனியாவப்போவது!
நம் காதலும்தான்..!
வா..!
காதல் சிலுவையில் இருவரும்!
உற்சாகமாய் அரைப்படுவோம்!
உன் கண்ணில் கண்ணீரோடு..!
என் புண்ணில் உதிரத்தோடு..!
நம் உயிரின் நீரை!
மாந்திப் பருகி!
பிரிவின் அரக்க நாவுகள்!
தாகம் துடைக்கட்டும்..!
-ஆதி
ஆதி