இரவின் அழகை வாசிக்கும் !
மெழுகுவர்த்தியின் நாவை !
நறுக்கும் காற்றாய் !
காலம் அறுத்து விட்ட நம் !
ஆறு வருட பந்தம். !
காதல் பத்மவியூகத்தில் நுழையும் !
மன அபிமன்யுகள் !
மணக்கதவைத் !
திறக்கும் முன்னே !
மாய்ந்து போக, !
பிரிவின் வெளிச்சத்தில் புதிதாய் !
சிக்கிய விட்டில் பூச்சிகளாய் !
நாம்! !
நிலக் காதலிக்கு !
மரம் தரும் !
இலை முத்தங்களாய் !
பரிமாறப்பட்ட பாசங்கள் !
சத்தமின்றி சருகுகளாய் !
புதைக்கப்படுகின்றன! !
ரசவாதமா? ரசாயன மாற்றமா? !
அறியோம்... !
இடைவெளி பள்ளத்தாக்குகளில் !
நம் காதல் !
செய்த தற்கொலை !
செய்தி கேட்டு !
உறைந்தோம் ஒன்றாய்.. !
ஓய்வறியா செவிகளும் இதழ்களும் !
ஓயாது நன்றி சொல்லும் !
என் உயிர் தழுவிய !
உன் உறவின் உயிர்த்துறவுக்கு !
வளைக்கரம் வளைத்த என் தோள்கள் !
வேறொருத்தியின் தீண்டலுக்கு !
தயாராக... !
உன் இமைக் கதவுக்குள் !
நசுங்கி விட இன்னொருவன் !
காத்திருக்கிறான் !
காதலை சொல்லி கற்பிழந்த நாட்கள் !
கவலை மழலைகளைக் !
கல்யாணப் பரிசாய் !
தந்துவிட்டு போகிறது! !
வருடங்களை வினாடியாய் !
மாற்றிய மந்திரமே! !
வேண்டாத போது !
விருந்தளித்தாய் !
வேண்டிய போது !
விலகிக் கொண்டாய்... !
என்னை மடியில் கிடத்தி !
சொர்க்கம் சேர்ப்பித்த !
பெண்ணே, !
நரகம் மட்டும் நான் !
காண நீ எங்கே !
சென்றாய்? !
இந்த நரன் இங்கே !
கிழிக்கப்படக் காணாது !
அங்கே நீ !
நஞ்சமுது உண்கிறாயோ? !
என்னை நனைத்த உன் !
அலைகளில் நான் !
மூழ்கிப் போவேனோ? !
பயத்தின் பசிக்கு !
நீ இரையானாய்… !
இறையை நம்பாது !
ஆதலால் நம் மனிதக்காதல் !
இனி அமரக் காதலாய்... !
நிழலாய் மட்டும் இருக்கும் !
நிஜமே! !
எது நீ? !
நேற்றா? இன்றா? !
நாளையா? !
வேண்டாப் பக்கத்தைத் தாண்டும் !
புத்தக விழிகளாய் பழக்கப்படுத்தி !
எதார்த்தம் என்று !
மொழிவது சரியோ? !
நிகழ்வுகள் நிரப்பி கொண்டே வந்தாலும் !
நினைவுகளை சரிபார்த்து கொண்டு வரும் !
சூத்திரம் என்ன? !
வாழ்க்கையின் பகுதி !
காதலென்று விளம்பும் !
ஞானிகளே! !
வந்து என் நினைவுகளை !
கழற்றிப் போடுங்கள் !
செய்தால் உங்களுக்கு !
திருஷ்டி சுற்றி !
நான் போடுகிறேன்
வெங்கடபிரசாத்