எல்லாருக்கும் வாய்க்கிறது உறக்கம்!
கடிகாரத்தைப் போன்றவர்கள்!
என்ன செய்ய?!
சுற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.!
வெயிலின் நிழலில்!
இளைப்பாறிக் கொள்ளவும்!
மழையில் குளித்துக் கொள்ளவும்!
அவர்களுக்கு நேரம் கிடைத்து விடுகிறது!
பசியைத் தின்று!
வியர்வை அருந்தி!
காதுகளின் வாயிலாக!
ஏப்பம் விட்டுக் கொள்கிறார்கள்.!
புகையில் மூச்சும்!
திராவகத்தில் அமுதும்!
அருந்தக் கற்றவர்கள்!
மனிதர்களை விடவும்!
கருவிகளை மட்டுமே!
கடவுள்களுக்கு இணையாய்!
நம்புகிறவர்கள் நல்லவர்கள்!
உயிர்கள் எல்லாம்!
பதுமைகளாய் மாற!
பதுமைகளை உயிர்ப்பாய்!
இயங்கச் செய்யும்!
எந்திரசாலிகள்!
கூண்டுக்குள் அகப்பட்டவர்கள்!
கூடுகட்டத் தெரியாதவர்கள்!
கட்டுக் கட்டாய்ப் பணத்தில்!
கரையானாய் வசிப்பவர்கள்!
பொழுதுகளைக் கடத்தி!
போகத்தில் ஆழ்ந்து!
யோகமெல்லாம் கனவேபோல!
தூக்கமின்றிக் கிடப்பவர்கள்!
மொழியோ உணர்வோ!
மனிதருக்குள்ள மற்றவைகளோ!
சற்றும் இல்லாத !
விசித்திரப் பிராணிகள்!
நாளைய உலகை!
இவரே ஆள்வார்!
யாரோ சொல்கிறார்!
உண்மையாயும் இருக்கும்
அருணன்