குனித்த புருவத்தின் பார்வையில்!
ரௌத்ரக் குறிப்பின் ஒளிச் சிதறல்....!
சாபத்தை மீறிய!
சலிப்பின் நுனியில்!
கொவ்வைச் செவ்வாய்!
பற்களுக்குள் நசுங்கியது!
வியர்ப்பில் சுரந்த!
வெம்மை நீரில்!
வெண்ணீறு பாலருவி ஆயிற்று!
புடைத்து எழும்!
திருகிய தேகம்!
பதறி உதறியது!
அழிவே தொழிலாய்!
அறியினும் சூலமும்!
அஞ்சி நடுங்கியது!
போரெனும் கொடிய!
நரகியம் குலைக்க!
விரித்த தலைச் சடை!
இன்னும் முடிக்கப் படவில்லை!
யாரும் அறிய இயலாது!
இன்னும் எடுத்த கால்கள்!
தரை பாவாத இரகசியம்!
திரை இட்டுக் காட்ட!
காட்ட முயலும்!
பொய்யைப் புரிய வைக்கும்!
மௌனத்தின் ருத்ர தாண்டவம்!
ஓருயிரிலிருந்து ஓருயிர் கொள்ளும்!
ராக்கதம் வதைத்திட வேண்டி!
எமனை உதைத்திட வேண்டி!
எடுத்த கால்களின்னும்!
தரைபடவே இல்லை.!
உலகம் அளக்கப்பட!
மட்டுமல்ல.......!
அழிவுகளிலிருந்து!
காக்கப் படவும் வேண்டும்.!
காக்கப் படுத்தல்!
நீக்கப் படும்போது!
எடுக்கும் கால்கள்!
எழுவது உறுதி
அருணன்