எங்கும் எல்லாமே!
எனக்கு நேரம்!
தாழ்த்தி விடுகின்றது!
ஒரு கவிதையை!
ஒரு கட்டுரையை!
எழுதுவதற்கு நீண்ட நேரம்!
எடுத்துக் கொள்ளுகின்றேன்!
நீயோ புன்னகைத்து!
என்னை வெற்றி!
கொண்டு விடுகின்றாய்!
நானோ அலைகளின்!
தீராத சுழற்ச்சியில்!
கட்டுண்டு அலைகின்றேன்!
கருத்துக்களுக்காகவும்!
கற்பனைகளுக்காவும்!
என்னை நீ!
நாடி வருவதாகச்!
சொல்லிக் கொள்ளுகிறாய்!
ஆனால் நானோ!
சொற்கள் எழுப்புகின்ற!
வெம்மையோடு!
மோதிக் கொள்பவனாகக்!
கொடூரம் கொண்டு!
எகிறுபவனாக இருப்பது!
உனக்கு!
மகிழ்ச்சியை அளிக்கின்றது!
என்னை இலக்கியக்காரனாக!
நீ ஏற்றுக் கொள்ளாததையிட்டு!
எனக்கு எந்தத் துயரமும்!
கிடையாது!
அதற்காக எந்த அபத்தத்தையும்!
என் மீது திணித்து விடாதே!
நான் ஒரு!
அரசியல் விலங்கு தான்!
என்பதில் எனக்கு!
எப்போதுமே!
உடன்பாடு உண்டு!
அப்படியாயின்!
வெறும் விலங்காக!
மட்டுமே!
ஏன் என்னை!
உற்றுப் பார்க்கின்றாய்

நடராஜா முரளிதரன், கனடா