தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நீயில்லாத பயணங்களில்

மன்னார் அமுதன்
நீயில்லாத பயணங்களில்!
முழு இருக்கையில்!
முக்கால் இருக்கையை!
எவனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான்!
எவனையோ !
அலைபேசியில் அழைத்து!
ஆரிப் நல்லவனென!
நற்சான்றழிக்கிறான்!
இரால் வடையையும்!
இஞ்சிக் கோப்பியையும்!
சத்தம் கேட்குமாறு!
சப்பித் தின்றுவிட்டு!
உன்னைச் சுமந்த!
என் தோள்களில்!
தூங்கிப் போகிறான்!
பேய்க்கனவு கண்டதாய்!
திடுக்கிட்டு!
கடை வாய் எச்சியை!
என்னில் துடைத்துக்கொண்டே!
மீண்டும் அலைபேசுகிறான்!
யாரோ ஒருத்தியையும்!
அவள் தாயையும் !
தமக்கையையும்!
வார்த்தைகளால் கற்பழிக்கிறான்!
எதுவுமே உறைக்காமல்!
உனக்குப் பிடித்த !
சாளரக் கம்பிகளில்!
முகம் புதைக்கிறேன்!
என்னைப் போலவே !
உணர்வற்று !
பள்ளம், மேடுகளில்!
ஊர்கிறது பேருந்து

அலைவீசும் கடலோரம்…

வைகறை நிலா
அலைவீசும் கடலோரம்!
அமரும்போதும்!
உந்தன்!
அருகாமை ஏக்கம்!
மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை !
பார்க்கும்போதும்!
உந்தன்!
புன்னகைத் தாக்கம்!
உந்தன் பேச்சு !
உந்தன் முகம் என்று!
உள்ளம் முழுதும் உன்!
நினைவுத் தேக்கம்!
காலை மாலை!
செய்யும் செயல்களை!
தினம்!
தடுமாற வைக்கும்.!
- வைகறை நிலா

பிரிவு

நாவாந்துறைடானியல் ஜீவன்
நாவாந்துறைடானியல் ஜீவா- !
!
விடியாத இரவில் !
காத்திருந்தேன் !
விண் மீன்கள், !
பால்நிலா... !
அந்திப்பொழுதின் !
செவ்வாணச்சிவப்பு !
பார்க்க அழகாயிருந்தது. !
ஆயினும் !
கடலோடு மீனவன் !
காணமல் போவன் !
தெருவில் வந்தவன் !
திடீரென மாயமாய் !
மறைந்து போவான் !
தேசமே சோகமாய் ... !
எரியும் நெருப்பிலிருந்து !
விலகி, !
தொலை தூரப் பிரிதல்

1987 - அமைதி

பா.அகிலன்
பின்னரும் நான் வந்தேன், !
நீ வந்திருக்கவில்லை !
காத்திருந்தேன்... !
அன்றைக்கு நீ வரவேயில்லை, !
அப்புறம் !
சுவாலை விட்டெரிகிற தீயொடு !
தென்திசை நாட்கள் பெயர்ந்தன, !
காலம் தாழ்த்தி !
தெருவோரம் நாய் முகரக் கிடந்த !
உன் மரணம் செவிப்பட்டது நண்ப, !
துக்கமாய் சிரிக்கும் உன் முகம் நினைவில் வர !
தொண்டை கட்டிப் போயிற்று... !
எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே !
”விதி” என்றாகிவிட்ட சுதந்திரத்துடன் !
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம் !
பா.அகிலன் !
1990

மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்

மன்னார் அமுதன்
மெல்லக் கதவுள் !
மிடுக்காய் ஒளிந்தாள்!
-----------------------------------!
கண்டேன் அவளைக்!
கடற்கரை அருகே!
நின்றேன் ஒரு கணம்!
நினைவுகள் இழந்து!
சென்றேன் அந்தச்!
செம்மொழி அருகில்!
வந்தனம் என்றேன் !
வாய்மொழி இல்லை!
கண்டும் காணாமல் !
நிற்காமல் செல்லுமிவள்!
நிலவின் மகளோ !
நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்!
தீண்டாமல் செல்கிறாளே!
நீரின் உறவோ!
தொடர்ந்தேன் பின்னால்!
தொழுதேன் கண்ணால்!
அமர்ந்தேன் அந்த!
அமிர்தம் அருகில்!
***!
தாயின் கையைத்!
தட்டி எழுந்தவள்!
தாமரைப் பூக்களாய்!
வெட்டி மலர்ந்தாள்!
“போதும் போதும்”!
போகலாம் என்ற!
அன்னையை முறைத்து!
அருகினில் வந்தாள்!
போறோம் நாங்க!
நீங்களும் போங்க!
இதழ்கள் பிரித்து!
இருவரி உதிர்த்து!
அரிவரிச் சிறுமியாய்!
மறைந்தவள் போனாள்!
!
***!
!
சிந்தையை விட்டுச் !
சிதற மறுக்கும்!
மங்கையைக் கண்டு!
மாதங்கள் இரண்டு!
மறுபடி அவளைக்!
காணும் நாள் வரை!
மனதினை வதைக்கும்!
கனவுகள் திரண்டு!
***!
தேய்பிறையோ, !
வளர்பிறையோ!
தெரியாத நிலவு அவள்!
அடைமழையோ!
இடி புயலோ!
அறியாத அல்லி அவள்!
***!
புன்னகையின் தேவதையாய்!
பூமியிலே பிறந்தவளே!
என்னபிழை நான் செய்தேன்!
ஏனென்னை வெறுக்கின்றாய்!
காணாமல் நானிருந்தால்!
கணமொன்றில் இறந்திடுவேன்!
நோய்கொண்டு போகுமுன்னே!
நானுன்னைக் காண வேண்டும்!
***!
என்!
பாசமுள்ள பூமகளே!
வாசலிலே கண்டவுடன்!
வாங்கப்பா என்காமல் !
மெல்லக் கதவுள் !
மிடுக்காய் ஒளிந்து கொண்டு!
அம்மா அம்மாவென!
அரற்றி அழுதவளே!
அச்சம் வேண்டாம்!
பிச்சைக்காரனோ!
பிள்ளை பிடிப்பவனோ!
அச்சம் அறியாத - இளம் !
ஆண்மகனோ நானில்லை!
அப்பா...!
நானுன் அப்பா!
சீதனச் சீரழிவால்!
சிதறிய நம் குடும்பம்!
சீதேவி உன்னாலே!
சீராக வரம் வேண்டும்!
வாசலிலே கண்டவுடன்!
வாங்க என்று சொல்லாமல்!
மெல்லக் கதவுள் !
மிடுக்காய் ஒளிந்து கொண்ட!
என்!
செல்ல மகளே -உன்னைச்!
சீராட்ட வரம் வேண்டும்

ஒரு வரவுக்காய்

இளந்திரையன்
அன்றைப் போலவே!
இன்றும் எல்லாம்!
முடிந்து விட்டது!
சிரிப்பும் சிறு கெக்கலிப்பும்!
கம்மலும் இருப்பும்!
கதவு சாத்திப் போய்விட்டது!
ஒரு வரவுக்காய்!
நானும்!
ஒரு செலவுக்காய்!
இவர்களும்!
மூடிய அறைகளுக்குள்!
பதினாறு வயதில்!
திருவிழா போலவே!
இருந்தது!
முப்பது வயதிலும்!
முடியாமல் போனது!
கூண்டுக்குள்!
அடைபட்ட கிளி!
சிறகடித்துச் சிறகடித்து!
சிறகுதிர்த்தது!
கூண்டைக் கொத்தி!
இரும்பை வளைக்கும்!
முயற்சியில்!
சொண்டு மட்டும்!
பச்சைப் பசேல் காடும்!
பறந்து திரியும்!
உரிமையும்!
கிளிக்கு மட்டும் தானா?!
- இளந்திரையன்

எமதுலகில் சூரியனும் இல்லை

ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே
இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்!
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்!
இறப்பர் விலை அதிகரித்த போதும்!
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென!
உணர்கிறது இதயம் எப்போதும்!
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்!
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே!
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்!
இரு பாதங்களையும் வைத்தபடி!
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து!
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி!
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்!
உரிமை எமக்கில்லை பிள்ளையே!
ஊருமற்று நாடுமற்று!
லயன் தான் வாழ்க்கையே!
கிணற்றுத் தவளைகள் போல!
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்!
உரிமையில்லை எதற்கும்!
இது பற்றிக் கதைக்கவும் கூட

இன்னமும் ஏதோவொன்றிற்காய்

எதிக்கா
இடி இடிக்க பூமி நடு நடுங்க !
பித்தம் தலைக்கேறி !
வாந்தியெடுத்தது வானம் !
கிருதயுகம, திரேதயுகம், துவாபரயுகம் !
எல்லாம் சுமூகமாக முற்றுப்பெற்றபோதும் !
கலியுகத்தில் மட்டும்.. !
பூமாதேவியின் !
கோரத்தனமான ஆட்டத்தில் !
அண்டம் - ஆங்காங்கே சரிந்து !
நிமிர்ந்தது !
அச்சரிவுகளுக்கு அசைவுகொடுக்க முடியாமல் !
ஏழுகடல்களும் ஆட்டம்கண்டு !
கொடுங்கோபத்தோடு கொந்தழித்தது !
பெருக்கெடுக்கும் கடல்நீரை குடிமனைகள் மீது !
உமிழ்ந்துகொட்டியது !
வெறித்தனமான சூறாவளியின் வேகத்தில் !
கட்டடங்கள்முதற்கொண்டு !
மரங்கள், மனிதஉயிர்கள் !
மற்றும் எல்லாஉயிரினங்களும் !
ஒன்றாய் துவைக்கப்பட்டது !
சாவுக்கஞ்சி அவை எழுப்பிய !
கூக்குரல்கள் !
வங்கம் முதல் வைகுண்டம்வரை !
பேரதிர்வைக்கிளப்பியது-அதிர்வின் எதிரொலியில் !
வானமும் பலதுண்டங்களாய் வெடித்துச்சிதறியது !
மண்ஆசை !
பெண்ஆசை !
பொன்ஆசை கொண்டவர்கள் !
கொள்ளாதவர்கள் !
எல்லோரும் ஒன்றாய் !
சாதி, மதம், இனம், பால் !
வேறுபாடின்றி !
ஒரேபடுக்கையில் !
மூர்ச்சையடைத்துப்போய்ப் !
பிணங்களாய்ப் பிரண்டுபோயினர் !
சொற்ப இடைவெளிகளின் பின் !
வெடித்துப் பிழந்த வானம் !
இருளைமட்டுமே மெழுகியிருந்தது !
ஆடிய ஆட்டம் எல்லாம் ஓய்ந்து போனபோது !
அண்டம் - எங்கும் மௌன விரதத்துடன் !
ஏதோவொன்றிற்காய்க் காத்துக்கிடந்தது

அம்மா

றஞ்சினி
என் உயிர்தந்து என்னுயிராகிவிட்ட தாயே!
அன்று உன்னருகிழந்து!
இன்று உனையும் இழந்து தனிமரமாய்!
குளிருக்குள் உன் வடுதேடும் பறவையானேன்!
சிறுபிள்ளை தன் தாயிழந்த துயர் எம்மை வாட்டுகிறது!
கோழிக்குஞ்சுகளாய் உன் செட்டைக்குள் நாமிருந்த!
நாட்களைத்தேடுகிறேன்!
இறுதிவரை உன்முகம் காணாதுபோனதற்காய்!
ஏங்குகிறேன்!
எமக்காக உன்னலமிழந்து எமைக்காத்த என்தாயே!
நீ இருக்கும்வரை எனை அணுகா வாழ்வின் துயர்!
இன்று என்னிருப்பும் கேழ்வியாகி சுமையாகிப்போனதுபோல்!
எப்புத்தகத்திலும் அச்சிலில்லை உன்னிடம் நான் கற்றவைகள்!
உன் இனிய கனவுகளை என்னால் நிஜமாக்க முடியவில்லை!
உன்னுடன் கடசிவரை சேர்ந்துவாழவும் முடியவில்லை!
இருப்பினும் நீயும் உன் நினைவுகளும் என்னுடன்!
தன்னலமற்ற எவர்க்கும்தீங்கு எண்ணா!
உன் உள்ளம் வேண்டிநிற்கிறேன் அம்மா

நீயே வசந்தமாய்

சந்திரவதனா
நீயே..!!
அதிசயமாய்!
அழகிய ஓவியமாய்!
நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய்!
தழுவுகின்ற காற்றலையாய்.....!
எத்தனை பேருக்கு வசந்தமானாயோ..?!
உன்னை எண்ணி...!!
பூக்களின் நறுமணங்களை!
எத்தனை பேர் நுகர்ந்தார்களோ..!!
உனது விழிமொழிதலால்!
எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ..!!
உனது குடிபுகுதலினால்!
எத்தனை மனமுகடுகளில்!
இனிய கானங்கள் ஒலித்தனவோ..?!
இன்று உன் பிரிதலினால்!
எத்தனை மனங்கள் ஏக்கப் புள்ளிகளுடன்!
காதல் கோலங்களுக்காய் காத்திருக்கின்றனவோ..?!
புரியாமல் புலம்பாதே.!!
நீயே ஒரு அழகிய கவிதைதானே.!!
பிறகேன் தேடுகிறாய் கவி - தை யை..?