தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நிலா

நிர்வாணிதாசன்
சன்னலின் வெளியே!
விரிந்து கிடக்கும் இருளின்!
அந்தகார இருட்டு!
மைகொண்டு பூசியது போல!
என் மனதிலும்!
இருளைக் கரைக்க முயலும் மழை!
ஓயாத கிழவியின் முணு முணுப்பாய்!
குளிரில் உடல் நடுங்கும்!
என் மனதில் மட்டும் புழுக்கம்!
என் கரம் பற்றி!
அருகமர்கிறாய்!
வீசும் காற்றில் மழையின் மணம்!
மேகங்கள் விலக நிலவின் வெளிச்சம்!
என் மனதிலும்

செருப்புச் சேதி

ரவி (சுவிஸ்)
14 மார்கழி 2008.!
பாக்டாட்டில் செருப்புக்கு சிறகு முளைத்த நாள்!
இன்னும் 33 நாட்களுக்கான அமெரிக்க அதிபரை!
சொல்லப்போனால் ஒரு போர் எசமானனை!
சீண்டியது செருப்புப் பறவை.!
பத்திரிகையாளர் மாநாட்டில் நடப்பட்டிருந்த!
அமெரிக்க தேசியக்கொடியிடை சிறகடித்து!
மோதி விழுந்தது அது.!
ஒரு செய்தியின் வியாபகம் எழுந்தது,!
அதிலிருந்து.!
பேனாக்களின் வலிமை செருப்புக்கும் இருக்கிறது என!
நினைவூட்டினான் ஒரு பத்திரிகையாளன்.!
மாபெரும் மனித அழிவின் அலறல்களினதும்!
சிதைக்கப்பட்ட ஒரு பூமியினதும்!
இடிபாடுகளினுள் கூடுகட்டிய பறவை அது.!
போருக்கான வியாக்கியானங்கள் தன்னும்!
பொய்யாகிப் போனபின்னும்!
ஈராக் எரிந்துகொண்டுதானிருக்கிறது.!
எண்ணை வளம் அந்தப் பூமிக்கு!
போரை பரிசாக வழங்கியிருக்கிறது!
பதவி அழியமுன், எடுத்துச் செல்!
எங்களது இந்த இறுதி முத்தத்தை என,!
அவமானகரமான உனது முகத்தில் அறைந்துசொல்கிறோம்!
எங்கள் தணியாக் கோபத்தினை என!
செருப்புப் பறவை எடுத்துச் சென்ற சேதி!
வரலாற்றில் அழிக்கப்பட முடியாததாய்!
சொல்லப்பட்டாயிற்று, இரட்டைக் கோபுரத்தின் மீதான!
விமானப் பறவையின் மோதல்போல்.!
இந்த செருப்புப் பறவையின் முத்தம்!
விடைபெற்றுப் போகும் அதிபருக்கு மட்டுமானதா அல்லது!
பதவியேற்கப்போகும் அதிபருக்குமானதா என்பதை!
தீர்மானிக்கும் நாட்கள்!
எதிர்பார்ப்புகளுக்குரியன.!
-ரவி!
(17122008)

அலையில் பார்த்த முகம் தொகுப்பிலிருந்து

பாலு மணிமாறன்
அலையில் பார்த்த முகம் கவிதைதொகுப்பிலிருந்து சில கவிதைகள்!
1.நீர் சுரக்கும் அலை!
ஒரு அலை!
அழித்துவிட்டுப்போகலாம்!
நம்புங்கள்!
ஒரு மழை!
முளைக்க வைத்துப் போகும்!
2.இங்கு இப்படியாக இலக்கியம்!
ஜெயகாந்தன் புதுமைப்பித்தன்!
கு.அழகிரிசாமி தி.ஜானகிராமன்!
சுஜாதா பாலகுமாரன்!
இன்னும் எவர் எவரோ!
நூலக அடுக்குகளில் வரிசையாக!
எத்தனையோ நாளாய்!
என்னோடு பேச!
மன்னிக்கவும்!
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு!
ஒரு மணி நேர இண்டர்னெட்டில்!
பிரான்ஸ் தேசத்து பெண்ணோடு!
பில் பிளிண்டன் பற்றிப் பேச!
இன்னும் இருப்பதோ இருபது நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்!
பேசலாம் பின்னொரு நாள்!
3.ஈதலே வித்தாக!
சாமி!
வேலை அவசரத்தில்!
சிகப்பு சிக்னல் பரிதவிப்பில்!
பச்சை விளக்குக்கு!
பதற்றமாய் பார்த்திருக்க!
வயிற்றுப் பிழைப்புக்கு!
முகம் முன்னே கரம் நீட்டும்!
குருட்டு மனிதனின் இருட்டுக்குள்!
கரையாமல் மறையாமல்!
ஏதேனும் ஈகின்ற!
இளகிய மனம் எனக்குத் தா

பிணக்கடன்

ரசிகவ் ஞானியார்
சமூக பிதற்றலுக்குப் பயந்து !
சாவு வீட்டுக்கு .. !
சம்பிரதாயத்திற்காய் சென்றேன். !
பூமியில் வாழுகின்ற !
ஒப்பந்தத்தை முடித்துவிட்டு !
சொர்க்கமோ? நரகமோ? !
புலம் பெயர்கிறது அது !
எத்துணை மதிப்புகள் !
இருந்தாலுமென்ன..? !
இருக்கும்வரை அவர் !
இறந்துவிட்டால் அது !

தெளிக்கப்படும்.. !
வாசனைத்திரவியங்களில் !
நாற்றத்தை உணர்கின்றேன். !

திருமணத்தில் !
தௌ¤க்கப்படுகின்ற !
பன்னீர்தான் என்றாலும் !
தெளிக்கப்படும் இடம்தான் !
வாசனையை தீர்மானிக்கிறது! !

தெருவில் தள்ளிவிட்டு !
அவமானப்படுத்திய.. !
கடைசிமகன் !
காலைப்பிடித்து !
அழுதுகொண்டிருக்க !
தனிக்குடித்தனம் சென்றுவிட்ட !
தலைப்பிள்ளையோ.. !
பாடைகட்டும் !
பரபரப்பில் !
சுற்றிக்கொண்டிருக்க.. !
அதிகம் !
துக்கப்படுவதாய் காட்டிக்கொள்ள.. !
மார்பில் அடித்துக்கொண்டு !
அலரும் சொந்தங்கள்.. !
என்னைப்போல் !
சம்பிரதாயத்திற்காய் !
வந்தவர்கள் யார்யாரோ !
திணறி திணறி !
முகத்தை சோகமாய் !
மாற்றிக்கொள்ள முயல... !

சடங்குகள் முடிந்து !
பாடை னக்கப்படும்நேரத்தில் !
மனச்சுமையை குறைக்க மறந்த !
மகன்கள்.. !
பிணச்சுமையை முதல்வரிசையில் !
தாங்கிக்கொண்டிருக்க !
வேடிக்கைகளையெல்லாம் !
வெறித்துப்பார்த்துவிட்டு !
கண்ணீரோடு நானும் !
கலைந்து சென்றேன். !
என்னிடம் !
பிணம் வாங்கிய கடனை !
பிறர் தருவாருண்டோ..? என்ற !
அதிகப்படியான வேதனையோடு.. !

மூத்த மகன்

மன்னார் அமுதன்
நான்!
யாராய் இருந்திருப்பேன்!
அக்காவின் உலகில்!

பொட்டிட்டும் பூவைத்தும்!
அழகு பார்த்தவள்!

தெருச்சண்டைகளில்!
எனக்காய் வாதிட்டவள்!

பாவாடை மடிப்புகளில்!
எனைப் பாதுகாத்து!
அப்பாவின் பிரம்படிகளை!
அவளே வாங்கியவள்!

பந்திகளில் முந்தி !
எனக்காய்!
பலகாரம் சேமித்தவள்!

கட்டிக் கொள்பவனை!
எனக்கும் பிடிக்கவேண்டுமென!
மீசை வைக்கச் சொன்னவள்!

அவள் உலகில் !
யார் யாராகவோ!
நான்!

யாருடைய உலகிலும் !
தம்பியாக முடியாமல்!
மூத்த மகன்!

மகளே உன்னாலே

சூர்யா
பூக்களின் பூரிப்புகளாலும்!
சுவரெங்கும் புதுச்சித்திரங்களாலும்!
வீடு நிறைகிறது மறுபடியும்.!
கைக்கடிகாரம் தங்கவளையல்கள்!
புத்தகங்கள் இன்னும் ஏதேனும் பரிசளித்து!
பிரியங்களால் நிறைப்பது சிறப்புப்பெறும்.!
அடைந்து கிடந்த அறைகள்தோறும்!
மறைந்து தொங்கும்!
புகைப்பட உருவத்திற்குள்ளும்!
பாய்கிறது ஜீவவெளிச்சம்.!
புன்னகை இழையோடத் துவங்கிட!
தழும்புகள் தரித்த கசக்கும் நினைவுகள்!
விடைபெறுகின்றன ஒருவழியாய்.!
-- !
சூர்யா

ஏவாள்கள்

ஸ்ரெபினி
சொல்லிவிடலாம்தான்!
சொல்தலுக்கு முன்னும் பின்பும்!
காட்சிகள் மாறிவிடலாம்!
!
முரண்பாடுகளின் உச்சம் நீ!
ஏன்றாலும்!
முரண்பாடுகள் எனக்குப் பிடிக்கும்!
என்பதால்!
உன்னையும் பிடிக்கிறது!
!
ஆனந்தமாய் பருகக்கூடிய நீர்தான்!
ஏன்றாலும்!
கொஞ்சம் விசம் இருக்கலாம்!
இருந்தாலென்ன!
ஏத்தனையோ சாம்ராஜ்யங்கள்!
சரிந்திருக்கின்றன!
சில இதழ்களின் விரிதல்களில்!
!
ஏவாழ்களின் வழித்தடங்களில்!
இதுவரை மாற்றமில்லை!
ஏவாழ் அழகானவள்!
என்பதை விட வேறென்ன!
!
ஆழகிய விழிகளில்!
ஆயிரம் பட்டாம் புச்சிகள்!
யாக்கிரதை!
அவை கூரிய அம்புகளுடன்!
வரலாம்!
!
போருக்குத் தயார்!
எனில்!
ஆதாமின் பலத்துக்கு!
முன்னால்!
ஏவாழ்கள் எம்மாத்திரம்!
- ஸ்ரெபினி

காதல் சுட்டுக் கொண்ட போது

கனகரமேஸ்
வெள்ளை இதய !
உறைக்குள் ஒட்டி !
கொண்டன உன் !
நினைவு துகள்கள் !
ஒரு சிகரட் டைப் போல் !
உன் வார்த்தைகளுக்கு !
தவமிருந்த வேளையில் !
பார்வையால் எரித்தாய் !
அத்தனை நினைவுகளும் !
உதிர்ந்து சாம்பலாய் !
போனாலும் !
என் காதல் மட்டும் !
இன்று குப்பை தொட்டியில் !
வீசி எறியப்பட்ட !
ஒரு சிகரட் பட்டாய்

மனிதன்

எதிக்கா
குரங்கின் வழித்தோன்றி!
யுகங்கள் பல கடந்தும்!
இன்னும் ஏன் உங்களுக்குள்!
அதன் புத்திமட்டும்!
மனிதன்!
பலவேறு மனங்களை நன்றாக!
அறிந்து ஆசைகள் பலகாட்டி!
மோசம் செய்பவன் அல்ல!
வரண்டுபோன இதயத்தை!
கொஞ்சம் கொஞ்சமாய் செப்பனிட்டு!
பசுமையை படரவைத்து!
வாழ்க்கையை மெதுவாய்!
வாழக்கற்றுத் தரும்!
உந்துசக்தியே அவன்.!
!
24.08.02

கல்

சூர்யா கண்ணன்
எறி!!
காயோ? பழமோ?!
ஏதோவொன்று விழுமேயென்றான்!
எறிந்தேன்!
மறுபடி எறிய!
கல்லாவது விழுந்ததே!..!
-சூர்யா கண்ணன்