தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
தேடும் என் தோழா - நடராஜா முரளிதரன், கனடா
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
தேடும் என் தோழா - நடராஜா முரளிதரன், கனடா
Photo by
FLY:D
on
Unsplash
சூரியப் பந்தத்தைக்!
கைகளால் பொத்தி!
அணைத்து விட்டு!
சந்திரனுக்கு ஒளியைப்!
பாய்ச்சி விடும்!
கைங்கரியத்தில்!
ஆழ்ந்து போயிருக்கும்!
என் தோழா !
நீ புனைவுக்காரன்!
சூனியமான சந்திரனைப்!
பிரவாகம் கொள்ள!
வைத்தது!
உனது கவிதைகள்தான்!
என்று கூறுவாய் !
பாய்ந்து வந்த!
கோடானுகோடி!
கதிர் வெள்ளத்தின்!
நதிமூலத்தை!
அங்கீகரிக்க மறுத்த!
கற்பனாவாதி நீ !
சாவுக் களங்களில்!
கொள்ளிக் குடங்கள்!
துளையுண்டு!
தண்ணீர் கொட்டும்!
வேளைகள்!
வாய்க்கரிசி நிறைந்து!
வழியும் கணங்கள்!
நட்சத்திரங்கள்!
எரிந்து வீழும்!
பொழுதுகள்!
எனது கனவுகளைக்!
குலைத்து விடுகின்றன !
எனவேதான்!
நித்தியத்தைத்!
தேடியலைய!
என் ஆன்மா!
மறுத்து விடுகின்றது !
ஆழ்ந்து மோனித்து!
கடைந்தெடுத்து!
உன்னையும் காணாது!
என்னையும் கண்டடையாது!
இறுமாப்பில் பெருமிதம்!
கொள்ளும் என் தோழா!
யுகங்களாய்!
தொடரும் தேடல்கள்!
முற்றுப்புள்ளியைத் தேடி!
முடிவிலி வரை!
பயணம் புரிகின்றன
நடராஜா முரளிதரன், கனடா
Related Poems
புரட்சி!
அந்த இரவு
என்னவர்களை நோக்கியே
கடன்!
எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை
எனது மண்ணும் எனது வீடும்!
அரசியல் விலங்கு
மீண்டும் போருக்கான அறைகூவல்
இன்னுமொரு..உயிர்த்தெழு.. காத்திரு
மைன் நதியோடு
அழிந்தது நீங்களல்ல அம்மா
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.