தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கசக்கும் நினைவுகள்

ஹபீலா ஜலீல்
கசந்து போகும் !
எம் நினைவுகளுக்குள் !
சதுரங்க விளையாட்டில் !
நகர்த்தப்படும் !
காய்களைப்போல !
நகரமறுத்தாலும் !
நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் !
மெய்களைப் புதைத்துவிட்டு !
பொய்களுக்காக !
புரட்சிக்கொடி ஏந்துகிறோம் ..!
அறிமுகங்களை !
அறுத்தெறிந்துவிட்டு !
ஆளுமையால் !
அடிமைகளாய் இருக்கிறோம் !
நீதி தேவதையின் !
கண்களை கட்டிவிட்டு !
தலைமேல் !
நடனமாடுகிறது தவறு ..!
போதி மரங்களுக்குள் !
ஒளிந்துகொண்டு !
புனிதர்கள் கூட !
புறப்பட்டு விட்டார்கள் !
புனித நீர் என்று !
களர் நீர் பருகிட ..!
பல பாகங்களில் !
ஆயுத அணிவகுப்பால் !
ஆதாரமின்றிப்போகிறது !
மனித உயிர்கள் ...!
வாசனைப் பூக்களை !
தொலைத்துவிட்டு !
காகிதப்பூக்களோடு !
காதல் மொழி பேசுகிறோம் ..!
கையிலிருக்கும் வைரங்களை !
நிலக்கரியாகவும் !
எங்கோ இருக்கும் !
நிலக்கரியினை !
வைரமாகவும் !
மதிக்கப் பழகி விட்டோம் !
மூங்கில் காடுகளை !
கொளுத்திவிட்டு !
பீரங்கித் துளைகளில் !
புல்லாங்குழல் ஓசையைத் தேடுகிறோம் !
நினைவுகளை தொலைத்துவிட்டு !
கனவுகளில் !
கூச்சல் போடுகிறோம் !
மொத்தமாய் ....!
அண்டசராசரங்கள் !
ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும் !
எங்கள் !
நெஞ்சங் கூட்டுக்கு !
கவசமிட்டு விட்டோம் !
நாங்கள்

மறுபடி பிறப்பீர்களா ?

தணிகை அரசு
செய்தி கேட்டபோது !
செவிகள் செயலிழந்தன !
உடல்கள் எரிந்த சடலங்களை !
ஒவ்வொன்றாய் கண்டபோது !
ஐயகோ ! எதையும் தாங்கும் !
இதயங்கூட இரண்டாய் பிளந்துவிட்டது !
!
பிஞ்சு உள்ளங்களைப் பிணமாகக்கண்ட !
நெஞ்சு இரண்டாய் பிளந்துவிட்டது !
தாம் பெற்ற செல்வங்கள் !
சவமாகிப் போனதை !
தாளாமல் தவிக்கும் !
தாயுள்ளம் கண்டு !
மீளாமல் எழுதுகிறேன் !
உஷ்ணத்தின் கொடுமையில் !
உயிர்விட்ட கண்றுகளே !
உலகமே அழுகிறது !
தமிழகத்தை தட்டி எழுப்பிய !
தங்கங்களே தூங்கிவிட்டீர்களே !
விதிமீறல் நடந்ததனால் !
விண்ணுலகம் சென்றீரே !
மாசற்ற உள்ளங்களே !
மழலைப் பிஞ்சுகளே நீங்கள் !
மறுபடி பிறப்பீர்களா ? !
!
G.T. Arasu !
2424 S.Beretania St, Apt # 303 !
Honolulu, HI 96826 !
808-3430949

அரங்கேற்றம்

கணபதி
சலசலக்கும் அருவியின்!
சங்கீத ஓசை!
சதிராடும் நீரின்!
சாரல்கள்!
கதிரவனின் கரம்பட்டு!
வண்ண ஒளி கூட்டும்!
நாட்டிய மேடை!
தென்றலின் துணையோடு!
ஆடும் செடி கொடிகள்!
கை தட்டி ரசிக்கும்!
பட்டாம் பூச்சிகள்!
காட்டில் ஒரு!
நாட்டியம்!
அரங்கேறுகிறது

உயிர் மழை

கீதா ரங்கராஜன்
மழையே உன்னைத் தூமலர் தூவி வரவேற்கிறேன்!
உன் தூரலை இனிய சாரலை தூற்றுவோர் பலர்!
அவருக்கெல்லாம் உரக்கச் சொல்வேன் உன் பெருமையை!
உணரட்டும் அவர்கள் உன் அருமையை!
உன் நிர்மலத்தின் புனிதம் புரியாத பலர்!
உனக்கு களங்கம் கற்பிக்கின்றனர்!
மானிடர் செய்யும் பிழையிலே உன் பங்கென்ன!
பருவ காலத்தே பெய்யும் மழையை பொய்க்க!
அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் என்னென்ன!
னிழல் தரும் தருவினை!
கனித் தரும் உயிரினை!
அழித்திடும் மனிதனே!
அமுதெனும் நீரினை!
அருளிடும் மழையினை!
பழித்திடும் உரிமையும்!
உனக்குண்டோ!
பயிர் செழிக்க பொழிகிறது மழை!
உயிர் அழிக்க விழைகிறான் மனிதன்!
குற்றமில்லாத மழையை குறை கூறும் மனிதனே!
சொல்கிறேன் கேள்!
கருப்பு குடை பிடித்து நீங்கள் தடுத்தாலும்!
சிகப்பு கம்பளம் விரித்து நான் அழைத்திடுவேன்!
உன்னை எங்கனமும் வரவேற்க!
அமிர்த வர்ஷினி பாடிக் கொன்டே இருப்பேன்!
விரைந்து வா!
-- கீதா ரங்கராஜன்

நிலவில்..ஏன்?.. கறுப்புப் பணம்

முத்து ரத்தினம்
நிலவில் நான்.. ஏன்?.. கறுப்புப் பணம்!
!
01.!
நிலவில் நான்!
-------------------!
எனக்கொரு இடம் வேண்டும் அந்த நிலவில்,!
நிற்கக்கூட இடமில்லை இந்த பூமியில்.!
தேய் பிறையில் வருவேன் இங்கு விடுமுறையில்,!
வளர் பிறையில் செல்வேன் அங்கு இன்பக்களிப்பில்.!
பாட்டி வடை சுட்ட கதை ஒன்றுண்டு அந்நாளில்,!
நாயர் டீ கடை உண்டு நிலவில் இந்நாளில்.!
நிலாச்சோறு உண்டு மகிழ்வோம் பௌர்ணமியில்,!
மாதமொருமுறை விடுப்பு அவசியம் அமாவாசையில்.!
ஜாதி, மத பேதமின்றி அனைவரும் குடியேறுவோம்,!
உலகின் மாதிரி சமத்துவபுரம் அங்கு அமைப்போம்.!
ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இயற்றுவோம்,!
தன்னலமற்ற தலைவர் பலரை உருவாக்குவோம்.!
02.!
ஏன்?!
-------!
என் விழியிரண்டும் மூட மறுக்குது, ஏன்?!
என் எதிரில் நீ இருந்தால்!!
மூடினாலும் தூக்கம் வர மறுக்குது, ஏன்?!
என் எதிரில் உன் பிம்பம்!.!
சாவை கூட என் மனம் ஏங்குது, ஏன்?!
எமன் பாசக்கயிறாய் நீ இருந்தால்!.!
உன்னுடனே நானும் சேர்ந்து சுற்றுவேன், ஏன்?!
பூமியாக நீ இருந்தால்!.!
உன் பார்வை திரும்பும் இடமெல்லாம் என் பார்வை, ஏன்?!
சூரியனாக நீ, சூரியகாந்தியாக நான்!!
கண்ணே, நானே உன்னை அணைப்பேன், ஏன்?!
நெருப்பாக நீ, கார்பன்-டை-ஆக்சைடாக நான்.!
!
03.!
கறுப்புப் பணம்.!
------------------------!
பணம் என்ற ஒன்று இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,!
பழைய பண்ட மாற்று முறையே சிறப்பு!.!
பருப்பு கொடுத்து புளி வாங்குடா தோழா,!
நாட்டில் பட்டினி என்ற சொல் இராது பாரடா..!!
வங்கி எண்ணிக்கை குறையும் பணம் போட,!
கிடங்கி எண்ணிக்கை உயரும் தானியம் போட.!
விளைச்சலால் தானே நாட்டில் எங்கும் பசுமை,!
விலைவாசியும் குறையும் என்பது இனிமை.!
ஆண்டி ஆவர், ஹவாலா கும்பல் விழிபிதுங்கி,!
திவாலாகி போண்டி ஆவர், சுவிஸ் வங்கி !!
வெள்ளை, கறுப்பானது கயவர் மடமை,!
கறுப்பை,வெளிக்கொணர்வது அரசின் கடமை.!!
அன்னிய கடனில் மூழ்கி நிற்கும் டைட்டானிக்,!
நம் நாடு நீர்மூழ்கி கப்பலாகி மூச்சு விடுவது,!
நல்லவர் சிலர் நாட்டின் தூண்களாய் இருப்பது !!
வல்லரசு தேவை, வேண்டும் முதலில் நல்லரசு!
பணம் இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,!
பழைய பண்டமாற்று முறையே சிறப்பு!.!
விளைச்சல் கொடுத்து பொருளை வாங்குடா நண்பா,!
மன உளைச்சல் இன்றி வாழுடா தெம்பா..!!
பணம் பத்தும் பேசும்...!
பண்டாமாற்று பத்தையும் தாண்டி பேசும்...!!
பொருளுக்கு பொருள் தேடி கொடு.!
இருளுக்கு வழி சொல்லி விரட்டிவிடு

இன்னும் நட்சத்திரம் இருளவில்லை

தணிகைசெல்வன்
கடலோரம் பெருவனங்கள்!
கரைநெடுக நெடுமரங்கள்!
படல்வீடே ஈழமுகம்!
பண்பாடே ஈழநிலம்!
படகெல்லாம் மீன்கள்வளம்!
படுகரையில் உப்பின் அளம்!
குடிதோறும் தென்னைவளம்!
குறும்பலா தரைதவழும்!
கரையோரம் நெய்தல்நிலம்!
கரைதாண்டி முல்லைவளம்!
மருத நிலம் நடுநாடு!
மண்மனக்கும் வயற்காடு!
பழந்தமிழர் கொல்லையெலாம்!
பனைமரங்கள் எல்லைகளாம்!
பழம்பதியின் முதற்குறியே!
பனைமரத்தின் முகவரியே!
நான்டுநிலம் கொண்டதனால்!
நானிலமே எமதீழம்!
நன்னிலத்தில் நெல்வாழை!
கன்னலுக்குக் கரும்பாலை!
நான்குநிலம் கொடுங்கோலாய்!
அஞ்சு (ம்)நிலம் ஆனகதை!
ஈழயினம் சிங்களத்தால்!
ஏழையினம் ஆனகதை!
அஞ்சும்நிலம் தடைமீறி!
மிஞ்சிநின்ற வேரின்கதை!
சிங்கத்தை வேங்கையினம்!
சீறிநின்ற போரின்கதை!
ஞாலமெல்லாம் எம்மினத்தை!
நடுக்களத்தில் விற்றகதை!
ஓலமிட்டு லட்சம்பேர்!
உலைக்களத்தில் வெந்தகதை!
கண்ணுள்ளார் காணவில்லை!
காதுள்ளார் கேட்கவில்லை!
குழந்தைகளை மீட்கவில்லை!
குமரிகளைக் காக்கவில்லை!
வாதை தடுப்பதற்காய்!
வேண்டினோம் டெல்லிக்கொடி!
வதையை நிறுத்திவிட!
வணங்குகிறோம் தொப்புள்கொடி!
எக்கொடியும் வரவில்லை!
இக்கொடியர் போர்நிறுத்த!
வக்கரித்த தேர்தலிலே!
வாக்களித்த தமிழர்களே!
மீளவும்யாம் எண்ணுகையில்!
நாளைஉயிர் யார் கையில்?!
ஈழமின்று நிலச்சிறையாய்!
வேலியிட்ட வெளிக்கடையாய்...!
ஒருகுவளை நீருக்கும்!
ஒருகவளம் சோற்றுக்கும்!
எம்நிலத்தில் கையேந்தி!
எம்குலத்தோர் வேகையிலும்!
நம்பிக்கை தளரவில்லை!
நட்சத்திரம் இருளவில்லை!
தம்பிக்கை உயிர்த்தெழும்பும்!
சரித்திரத்தைப் பெயர்த்தெழுதும்

நமக்கு உள்ளது

கோமதி நடராஜன்
தடுத்துப் பார்த்தாலும் !
தலைகீழ் நின்றாலும்இநமக்கு !
நடக்க இருப்பதுஇநடந்தேதீரும். !
தட்டிப் பார்த்தாலும்இ !
தடவித் தேடினாலும்இ நமக்கு !
வரவேண்டியது தானே வரும் !
எட்டிப் பார்த்தாலும் !
கொட்டித் தேடினாலும்இநமக்கு !
உள்ளது மட்டுமேஇஉள்ளே கிடக்கும். !
ஓடி ஒழிந்தாலும் !
ஒதுங்கி நின்றாலும்இ !
நமக்குஎழுதியதுஇஎதிரே நிற்கும். !
அர்ச்சனை செய்தாலும்இ !
ஆராதனை பண்ணினாலும்இ !
நமக்கு இட்டதேஇசட்டியில் விழும். !
பொத்தி வைத்தாலும் !
பூட்டிப் பதுக்கினாலும் நமக்கு !
உண்டானதே ஒட்டி நிற்கும் !
அடுத்தவர் தடுத்தாலும் !
தட்டிப் பறித்தாலும் நமக்கு !
நட்டது நமக்கென வளரும். !
ஏமாந்துஇவிட்டாலும் !
ஏமாற்றி எடுத்தாலும் நமக்கு !
எழுதியது மட்டுமே !
என்றும் நிலைக்கும். !
விட்டுக் கொடுத்தாலும் !
வீதியில் தொலைந்தாலும் நமக்கு !
விதித்தது நம்மிடமே நிற்கும். !
ஆகவே---!
எதை இழந்தாலும் !
எது நடந்தாலும் !
வளைந்து கொடுத்து !
நிமிர்ந்து நிற்கும் !
மூங்கிலாய்சமாளிப்போம். !
கழிவு நீர் கலந்தாலும் !
கற்பூரதீபம் மிதந்தாலும் !
கடல் தேடி ஓடும் !
கங்கையாய் ஓடுவோம். !
ஒளியில் குளித்தாலும் !
இருளில் மூழ்கினாலும் !
இரண்டையும் ஏற்கும் !
பூமியாய்சுழல்வோம். !

என்றென்றும் காத்திருக்கும்

வீ.இளவழுதி
என் நினைவே!
உன்னை தீண்டாவிடிலும்!
உன்!
இதயத்தின் ஓரத்தில்!
உன்னையும் அறியாமல்!
ஒட்டியிருக்கும் -!
என் பிம்பம்!
என்றாவது கஷ்டப்படும்!
நொடியில் நீ!
தோள் சாய்ந்து இளைப்பாற!
என்றென்றும் காத்திருக்கும் ....!
!
-வீ.இளவழுதி, பின்னையூர்

உரிமைகள்

வேதா. இலங்காதிலகம்
விரிந்த உலகில் வழிவழியாக!
உரிமைகள் தொடர்வது இனிமை பெருமை.!
உரித்துடன் தானாகவும் வரும் உரிமை,!
வரிந்து கட்டிக் கொண்டும் பெறப்படும்.!
உரிமைகள் நெரிபட்டு அழிவதுமுண்டு.!
உரிமையின் உரித்தாளர் ஊமையாவதால்!
உரிமைகள் தானாக அழிவதும் இயற்கை.!
அரிய எம்முரிமைகள் தாயகத்தில் சரிந்துள்ளது. !
உரித்துடை சிறுபான்மைத் தமிழருக்கு!
உரிமைகள் காலாதி காலம் மறுக்கப்பட்டது.!
நரித்தன அரச ஒடுக்கு முறைகளால்!
காரிருளாய்க் குவிகிறது துன்ப மேகங்கள்.!
பேரினவாதம் பேயாட்டம் ஆடுகிறது.!
சாம, பேத, தான தண்டமாக!
சனநாயகம், அகிம்சை வழி முடிந்து!
சமர் எனும் தண்டம் நடக்கிறது.!
ஓரினம் தன்னை ஆள நினைப்பது உரிமை.!
வேரினை அழித்து இனத்தை ஒடுக்கி!
ஊரினை அழித்து மாற்ற நினைப்பது!
பேரினவாதப் போராட்டம் தான். சமாதான காண்டம், தூது காண்டம்,!
அமைதி காண்டம் இன்று ஒரு!
போர்க் காண்டமாகி உரிமைக்கான!
போராட்டமாகிறது, வாரோட்டமாகிடுமோ?!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
28-4-08

என்னவள் ஒரு தேவதை II, III

ராம்ப்ரசாத், சென்னை
என்னவள் ஒரு தேவதை II - III!
--------------------------------------!
II. !
வைகறையில் நீர்தெளித்து!
கோலமிட வாசலுக்கு!
வருகிறாய்...!
உன் வருகைக்காக‌!
காத்திருக்கிறோம்!
நானும் வைகறையும்...!
நீரள்ளி நீ தெளிக்கையில்!
சிதறிவிழும் ஆயிரம்!
துளிகளில் ஒவ்வொன்றிலும்!
உன் பூமுகம் தெரிய‌!
ஒவ்வொன்றிற்காகவும்!
ஒரு முறை மீண்டும்!
பிறக்க நினைக்கிறோம்!
நானும் வைகறையும்...!
நாளை மீண்டும்!
உன்னை த‌ரிசிக்க‌வே!
பக‌லுக்கு வ‌ழிவிட்டு!
க‌ட‌ந்து போகிற‌து!
வைக‌றை...!
நாளைவ‌ரை காத்திருக்க‌!
ம‌ன‌மின்றி!
நான் ம‌ட்டும் தொட‌ர்கிறேன்!
என் விடிய‌லை!
உன்னை பார்த்த‌ப‌டியே...!
!
III!
என்னவள் ஒரு தேவதை!
--------------------------------!
குளவிப்பூ விரல்களை!
வட்டமாய்க் குவித்து!
அதில் சோப்பு நீரால்!
சிலந்திவலை பிண்ணி!
உன் குவளைப்பூ இதழ்களைக்!
குவித்து காற்றில்!
ஏதோ ரகசியம் சொல்கிறாய்...!
அந்த‌ ரகசியங்களை!
மூட்டைகட்டி காற்றில்!
பறக்கின்றன நீர்க்குமிழிகள்...!
அவைகளில்!
என்னைப்பற்றிய செய்தி!
ஏதேனும் இருக்குமாவென!
நான் ஆர்வமுடன் தேட‌!
ஒவ்வொன்றும்!
என் உள்ளங்கையில்!
வட்டமாய்!
சிலீரிட்டு வெடித்து!
உன் குவளைப்பூவிதழ்!
ஈரம் தான் அந்த!
ரகசியங்கள் அனைத்தும்!
என்று சொல்லாமல் சொல்லின‌