தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நகரமமும் நானும்

மனோவி, சென்னை
நாகரீக மோகத்தால்!
நகரம் நோக்கி நகர்ந்த நான்!
நற்செல்வம் பல இருந்தும் எதையோ!
நாடி மனதாற் திரிந்தேன்..!!
பச்சைபசேலென்ற வயல்கள்!
வற்றாத ஓடைகள்!
ரீங்காரமிடும் குருவிகள்!
மனிதரை மதிக்க தெரிந்த மக்கள்!
மகிழ்வு தரும் திருவிழாக்கள்!
வெட்டவெளி விளையாட்டுகள்!
என என்னுள்!
கிராமத்து இன்பங்கள் நிழலாடின..!!
!
ஓங்கிய கட்டிடங்கள்!
தூய்வற்ற தண்ணீர்!
கூண்டு பறவைகள்!
கூத்தாடும் இரவுகள்!
கணினியே கதியென மக்கள்!
வீடியோ விளையாட்டுகள்!
என எதையுமே!
ஏற்கவில்லை என்னின் மனம்..!!
!
துன்பத்திற்கு விலையாய் கொடுத்த!
இன்பங்களை நினைந்து!
கிராமத்திற்கு திரும்பினேன்.!
!
கவிதையாய் இருந்த என் கிராமம்!
கசங்கி கெட்டது கண்டு!
கதி கலங்கி விட்டேன்..!!
எது வேண்டாமென எண்ணினேனோ!
அது அவசரகதியில் வளர்ந்து வருகிறது!
மனைகளாகும் வயல்கள்!
மறைந்து போன பறவைகள்!
தொலைபேசும் மக்கள்!
தொல்லைகாட்சி என மெல்ல!
நகராமாய் இல்லை நரகமாய்!
உருமாறி வருகிறது என் சொர்க்கம்

இது என் முதல் கொலை.. சாதி மறு

வித்யாசாகர்
; சண்டையொழி..!
01.!
இது என் முதல் கொலை.. !
--------------------------------!
துரத்தி துரத்தி பெண்களை வெட்டுகிறாய்!
வெட்டு வெட்டு!
இரத்தத்தில் ஊறி சரியட்டும் உனது ஆண்மை..!
குத்தி குத்தி பிய்த்து சதையுண்ணும்!
மிருகத்தைவிட நீதான் பெரிய படைப்பில்லையா!
மனிதனாயிற்றே சும்மாவா; குத்திப் போடு..!
சாதியில் ஒரு குத்து!
மதத்தின் மீது ஒரு குத்து!
இந்த தேசத்தின் நெற்றியில் ஒரு குத்து குத்து..!
ஒரு உயிர் இந்த தேசத்து மக்கள்முன்!
பட்டப்பகலில் வெட்டவெளியில் கொன்று பறிக்கப்படுமெனில்!
மடிவது பெண்ணல்ல, எம் தேசத்தின் மாண்பு;!
அதனாலென்ன நீ குத்து !
அவள் இன்னொருவனின் தங்கை!
வேறொருவனின் மகள், எமது தாய்மையின் ஒரு பெருந்துளி!
அதனாலென்ன நீ குத்து!
நீ குடித்த பால்நாற்றம்!
அவள்மீது கூட அடித்துவிடலாம்,!
காலகன்று உனை ஈன்றப்!
பெண்மை வயிறுபிடித்துனக்கு!
சாபமிட்டிருக்கலாம்;!
அதனாலென்ன நீ குத்து!
ஒன்று இரண்டு மூன்று என இருபத்தைந்து முறை!
ஒரு பெண்ணைக் கத்தியால் குத்துகிறாய்,!
உன் பெருமை உன்மீதே யுனை காரி உமிழ்ந்திருக்கும்!
நீ கண்டிருக்கமாட்டாய், உனது கண்களின் வெறித்தீக்கு!
அதெல்லாம் இரையாகிப் போயிருக்கும்..!
எனக்குப் போகாது..!
அவள் கத்தியது எனது காதுகளை மௌனமாய்க்!
கொல்கிறது; கண்களுள் தீயாய் எரிகிறது..!
ஒவ்வொரு பெண் மடிகையிலும்!
எனது அறம் எனை அறுக்கிறது!
உயிருக்குள் அழுகிறேன் நான்; உனக்கெங்கே போனது உன் ஈரம்?!
உனக்கு ஈரம் இல்லை!
ஆண் எனில் தாயின் இன்னொரு பக்கம் என்பது!
உனக்கில்லை; நீ கொல்.. குத்து.. மனிதமரு.. மாய்ந்து போ..!
எங்கே போக.. உன்னை விடுவதாயில்லை!
எனது கைகளை இதோ உயர்த்திப் பிடித்திருக்கிறேன்!
எழுத்துக்களை எடுத்தெடுத்து அரிவாளாக வீசுகிறேன்!
வீசி வீசி உனை வெட்டுகிறேன்!
வெட்ட வெட்ட சரிவது – உனது உடலாகவோ!
உதிரமாகவோவெல்லாம் இருந்துவிடவேண்டாம்!
அந்த ஆண் திமிராக!
உன் அறியாமையாக இருந்துபோகட்டும் போ..!
போடா போ..!
!
02.!
சாதி மறு; சண்டையொழி..!
---------------------------------!
சதையறுக்கும் பச்சைவாசம்!
ஐயோ சாதிதோறும் வீசவீச,!
தெருவெல்லாம் சிவப்புநாற்றம்!
முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச!!
மாக்க ளூடே சாதி வேறு!
மண்ணறுக்கும் சாதி வேறு!
மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்!
சாக்கடையில் விட்டெறிடா!!
பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு!
வெற்று சாதிக்காய் மூண்டதுவே,!
பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை!
தகதிமிதோம் ஆடுதுவே;!
ஐயகோ பூமிப் பந்தை!
அற்பசாதி அறுத்திடுமோ!
ஓட்டைத்தட்டில் வறுமையென்றால்!
உயிர்க்கொண்டு அடைத்திடுமோ..?!
வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு!
ஊரெல்லாம் ரெண்டாப் போச்சே,!
அடேய்; மனிதத்தை விற்காதே, நில்!
இனி மிருகங்களே காரி உமிழும்!!
மிச்சத்தை மீட்கவேனும்!
மனிதர்களாய் ஒன்று கூடு,!
அங்கே ஆடையற்று கூட நில்!
சாதியோடு நின்று விடாதே;!
சாதியை விடு..!
சாதி போகட்டும் விடு..!
ஓ மனிதர்களே வா’!
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”!
சொல் “நான் சாதியற்றவன்”!
சாதியற்ற இடத்தில்தான் நாளை!
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,!
மழை நிலா காற்று போல நாமும்!
மனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்

பாட்டுக்கு ஒரு தலைவன்

ப.மதியழகன்
சமுதாய நிகழ்வுகளை உள்வாங்கி!
கவிதையாய்ப் புனையும்!
இவனது கற்பனைத் திறனே!
இவனுடைய சொத்து!
பத்திரத்தில் பதிய முடியுமா!
பலர் மத்தியில் பெருமிதம்!
கொள்ள முடியுமா!
இவன் இதை வைத்து!
உறவுகளின் உதாசீனப்படுத்தலையும்!
நண்பர்களின் நையாண்டியையும்!
மனைவியின் அன்றாட!
ஏச்சுப் பேச்சுக்களையும்!
ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு!
கண்ணுறக்கம் கூட முள்படுக்கைதனில் என்ற!
இக்கட்டு தொண்டைக்குழியில் உயிர்நோக!
இறுக்கிய சூழ்நிலையில்!
சுழன்று சுழன்று வீசும்!
சூறாவளியிலிருந்து!
இவனது உள்ளுக்குள் எரியும்!
படைப்புக்கு பிரகிருதியான சுடரை!
அணையாமல்!
ஜீவன் பிரியும் வரை!
தமிழ்ப்பிரவாகம் குறையாமல்!
காப்பாற்றி வந்தான்!
தன்னை தமிழுக்கு அர்பணித்து!
மகாகவிஞன் மறைவுக்குப்பின்!
கல்லறையில் ஏற்றிவைத்த அகல் விளக்கு!
காற்றினால் அணைந்த பின்புதான்!
இவனுடைய கவிச்சுடர் விளக்கு!
இலக்கியவானில்!
விடிவெள்ளியாய் ஒளிவீசத்துவங்கியது!
காலவெள்ளம் கவிஞனை!
அடித்துச் சென்றுவிட்டபோதிலும்!
அவனது கவிவெள்ளத்தில்!
சிக்காமல் மீண்டவர் யார்!
இங்கு

பிரிவு

இரா சனத், கம்பளை
நட்பின் முகவரி!
நகர்வின் முடிவு!
நண்பர்களின் எதிரி!
நரகத்தின் வாசல்!
காதலின் கோட்பாடு!
கல்லறையின் ஏற்பாடு!
கவர்சியில் மோகம்!
களத்தில் மோதல்!
அளவுகடந்த கோபம்!
அர்த்தமில்லா உறவு!
அன்பை எதிர்த்தல்!
ஆணவத்தில் வாழ்தல்!
விடாபிடி தனம்!
வீண் சந்தேகம்!
விளையாட்டுத் தனம்!
வித்திடும் பிரிவுக்கு

ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

எம்.ரிஷான் ஷெரீப்
கறுத்த கழுகின் இறகென இருள்!
சிறகை அகல விரித்திருக்குமிரவில்!
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்!
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி!
கிராமத்தை உசுப்பும்!
சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்!
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்!
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்!
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்!
விடைத்து அகன்ற நாசியென!
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு!
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்!
சனம் விழித்திருக்கும் அவ்விரவில் !
பேரோலமெனப் பாயும்!
பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்!
ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப !
மாறி மாறியசையும் அக் காரிருளில்!
அவளது உடல்விட்டகழ மறுக்கும் !
யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்!
மந்திரவாதியின் கசையும்!
ஆட்டக்காரர்களின் பறையும் !
மட்டுப்படுத்தும்!
பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை!
அன்றைய தினம்!
குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்!
எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்!
அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்!
துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு!
ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்!
பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான !
துர்சொப்பனங்கள்!
அந்தகாரத்தினூடே!
அவர்களோடும் அவைகளோடும்!
சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ!
இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்!
அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

உலகமே இப்போது மட்டும் ஏன் நீ..?

இளவரசன்
உலக நாடுகளின் தலைநகரங்களில்!
உரிமையோடு குரல் தந்தோம்!
அரங்கங்கள், சதுக்கங்கள், அனைத்திலும்!
நிறைந்து நின்று நியாயம் கேட்டோம்!
தமிழன் உயிர் வதைபடும் போதெல்லாம்!
ஊமையாய் நீ கிடந்தாய்!
இப்போது மட்டும் நீ ஏன் உளறுகிறாய் ?!
வாயில்லாப் பிராணிகளுக்கு!
இரங்குகின்ற உலகமே !!
நாம் வானதிரக் கத்தினோமே!
காதடைத்துக் கிடந்தாயே !!
இப்போது மட்டும் நீ ஏன் உளறுகிறாய் ?!
புங்குடுதீவு, அல்லைப்பிட்டி, வங்காலை.!
தொடர்ந்த வேளையிலே!
மூச்சடைத்துக் கிடந்தாயே !!
செம்மணி, கைதடி.. என!
தொடர்கிறது புதைகுழிகள்!
மனிதம் பற்றிப் பேசுபவரே நீர்!
ஊமையாய் போனீரோ?!
பச்சிளம் பிஞ்சுகளும், பாலறா வாயர்களும்!
பிச்செறியப்படுகையிலே எமக்காய்!
குரல் காட்ட மறந்தவர் இங்கே!
குருடாகிப் போனீரோ ?!
குருடராய், செவிடராய்!
ஊமையாய், முடமாய் கொஞ்சம்!
இப்படியே இருந்து விடுங்கள்!
ஐம்பத்தெட்டில் விதைத்த வினையின்!
அறுவடை தொடங்கிவிட்டது!
வலியை எமக்குத் தந்தவர்க்கே அது!
பரிசாய் கிடைக்கப்போகிறது!
நாங்கள் துடித்த போதெல்லாம்!
பார்த்திருந்தவர்களே - இன்னும்!
கொஞ்சம் அமைதியாய் இருங்கள்!
அவர்களும் வலியைக் கொஞ்சம்!
உணரட்டும்!
இனி வருவது அறுவடைக் காலம்!
!
- கனடாவிலிருந்து இளவரசன்

நீ போனாலும்

தியாகு
கடற்கரையெங்கும்!
பரந்து கிடக்கும் உன்!
சிரிப்பென்னும்!
கிளிஞ்சல்களை!
கைநிறைய அள்ளுகிறேன்!!
காதல்எனும்!
மணல் வீட்டை!
திரும்ப திரும்ப!
கட்டுகிறேன்!
இல்லைஎனும் அலைகள்!
இனிவராது இருக்கலாம்!!
பார்வையெனும்!
சிறு குழிகள்!
கரையோரம்!
தோண்டுகிறேன்!
கிடைப்பதென்னவோ!
கண்ணீர்எனும்!
அதே உப்புநீர்தான்!!
மணல்வெளியெங்கும்!
உன் பாதத்தின்!
சுவடுகளையாவது!
விட்டுசெல்!
முன்னறிவிப்பின்றி!
உன்போல்!
போகமுடியாதென்னால் !!
அன்புடன்!
தியாகு

இனியேனும்

கருணாளினி.தெ
இலை உதிர்ந்து சருகாக!
இளவேனில் போய் பனி வந்தது!
இருள் அகன்று ஒளி வர!
இளஞ் சூரியன் எழுந்துவந்தான்!
இரை தேடும் பசிப்புலியும்!
இச்சை உடன் காத்திருந்தது!
இதயமில்லா கயவர் ஒழிக்கப்பல!
இரக்கமுள்ள பெண்டிரும் எழுந்தனர்!
இனவெறி கொண்ட கொடியவர் ஒழிக!
இன்னும் எத்தனை உயிர்களோ!!
இலுப்பம்பூச் சக்கரையாப் பல!
இள உடல்கள் சிதைந்து போயின!
இசை பாடும் மூங்கிலும்!
இப்போராட்டத்தில் உதவியது ஆனால்!
இக்கரையில் உள்ள பலர்!
இனயேனும் சிந்திப்பாரா!!
நன்றி :: ” விழிப்பு ”

வாழ்க்கை ஒரு கனவு

அரவிந்த் சந்திரா
திசையிலா வெளியில்!
திகைத்திடும் கும்பல்!
கனவுகள் நினைவாய்!
களித்திடும் கூட்டம்!
வரும் நொடி அறியா!
த்ரிகால ஞானியர்!!
தத்துவ தூற்லால்!
தழைத்திடும் தலைமுறை!
வாழ்க்கை ஒரு கனவு!
வாழ்க்கை ஒரு கனவு!
பாதையின் ஒரு நுனி!
தொடக்கம் என்றால் !
பாதையின் மறு நுனி!
முடிவு !!
தொடக்கமும் முடிவும்!
இயல்பே!!
கனவின் தொடக்கம்!
உறக்கம் என்றால்!
கனவின் முடிவு!
விழிப்பு. !!
வாழ்க்கை ஒரு கனவு !!
வாழ்க்கை கனவில்!
தொடக்கம் விழிப்பு !
உறக்கம் முடிவு !
வேடிக்கை பார்த்தீரா!
வாழ்க்கை கனவில்!
தொடக்கம் விழிப்பு !
உறக்கம் முடிவு !!
போலி மனத்தின்!
போக்கிரித் தனமும் !
பொய்யும், புரட்டும்!
வாடிக்கையான!
வம்புப் பேச்சும் !
வறட்டுத்தனமான!
வேதாந்தங்களும்!
வாழ்க்கை !!
வாழ்க்கை ஒரு கனவு !!
பயந்து , பதுங்கி !
பாம்பாய் அடங்கி !
நினைப்பதையெல்லாம்!
திருட்டுத்தனமாய்!
உறங்கும் போது!
ஆட்சி நடத்தி!
காட்சிகள் காணும்!
உள் மனம் ! - அதற்கு!
கனவே வாழ்க்கை !!
கனவே வாழ்க்கை !!
பகற் கனவாயினும் !
இராக் கனவாயினும் !
துன்பம் எனினும்!
துக்கம் எனினும் !
தூக்கம் வேண்டும் !!
தூக்கம் வேண்டும் !!
தூக்கம் கொண்ட!
மனிதர் வேண்டும் !!
கனவைக் காண்பது!
மனிதர் என்றால் !
வாழ்வாம் கனவை!
காண்பவர் எவரோ?!
மனிதனைப் படைத்து!
மனிதனை நினைக்கும்!
இறைவனின் கனவு!
வாழ்க்கை !!
வாழ்க்கை ஒரு கனவு!
தூங்கா இறைவனின்!
கனவுதான் முடியுமா?!
தூங்கி இருந்தால்!
தோன்றியதென்னாள்?!
வாழ்க்கை தொடர்ந்து!
முடிவது கண்டோம் !
முடிந்திடும் கனவே!
முடியாக் கனவா?!
உடல் சாஸ்வதமாய்!
ஊன்றிப் பார்த்தால்!
வாழ்க்கை கனவில்!
முடிவுகள் உண்டு !
இறைவன் கூட!
தூங்கி விழிக்கும்!
கனவுகள் காணும்!
சராசரி மனிதன் !!
ஆனால் -!
ஆத்ம சிந்தனை!
செய்து பாருங்கள் !
வாழ்க்கை கனவில்!
படுவது உயிர்கள் !!
ஆத்மா என்பது!
அழியாதது !!
ஆத்மா என்பது!
உள்ள வரையிலும்!
வாழ்க்கை கனவு!
முடிவது எப்படி?!
தூங்கும் இறைவனின்!
தொடர்ந்த கனவு!
தூங்கும் சிவத்தின்!
சக்தியே கனவு !!
இதனை விட்டொரு!
படும் உயிர் நினைத்து!
இறைவன் தூங்கினான்!
இறைவன் தூங்கினான்!
என்று பித்ற்றுதல்!
எப்படி ஆகும்?!
உடலை நினைத்து!
வாழ்க்கை ஓட்டி!
களித்து மகிழும்!
இவர்கள் பேச்சு!
தத்துவ கங்கையில்!
கொசுவின் முட்டை !!
புலை குணம் கொண்டார்!
இவருக்கு இந்த!
தத்துவம் புரிவது!
கடினம்!
வாழ்க்கை ஒரு கனவு!
வாழ்க்கை ஒரு கனவு!
போதும் விடுங்கள்!
போய்த் தூங்குங்கள்

நாட்காட்டி

நளாயினி
திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே !
கிழித்துப்போடும் எமக்கு !
கடந்த பொழுதுகளின் !
நிகழ்வுகளின் நினைவுகளை !
மறந்துவிடத் தெரிவதில்லை. !
நாட்கள் ஏனோ !
அத்தனை !
வேகமாகத்தான் போகிறது. !
நிகழ்வுகளின் !
நினைவுகள் மட்டும் !
ஏனோ முடிவதில்லைத்தான். !
அழுகிறோம் . !
சிரிக்கிறோம். !
அனலாகிறோம். !
ஆனாலும் !
புதிதாய் வரும் !
ஆண்டின் நாட்காட்டியை !
ஏற்கத் துடிக்கும் !
சுவரில் அறைந்த !
ஆணிபோல் தான் !
நாமும். !
நளாயினி தாமரைச்செல்வன். !
01-02-2003