தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வெளிச்சத்தில் நின்ற உருவமாய்

மாலியன்
நிழல்கள் துப்பி திசைகள்தேடி !
விரிந்தும் நெழிந்தும் !
வெளிச்சத்தில் கரைந்துவிடாமல் !
இருப்பதற்காய் முயன்றுகொண்டிருந்தேன் !
முடியவில்லை !
உச்சியில் வெளிச்சம் அடித்துவிட்டால் !
கரைந்துவிடும் நிழல்கள் !
குடைக்குள் ஒளிந்துகொண்டேன் !
என்னை மீட்டெடுக்க நீங்கள் !
வராதீர்கள் !
உங்கள் குடை என் குடையுடன் !
முட்டிக்கொள்ளும்

உன்னைச் சேரத்துடிக்கிறது உயிர்

ஆர். நிர்ஷன்
அருகருகே வரையப்பட்டாலும்!
சேரமுடியாத சித்திரங்களாய்...!
சந்திக்கும் தூரத்தில்!
சந்திக்க முடியாமல் நாம்…!!
!
போகும் இடமெல்லாம்!
இங்கே இருப்பாயா?!
என தேடித்தவித்த பொழுதுகள்…!
பார்க்கும் வெளியில்!
நீ இருப்பாயென!
கண்ணுக்குள்ளே உன் படத்தை!
அசைபோட்ட நாட்கள்…!
எனையறியாத துடிப்பு!
இதயத்துடிப்பையும் தாண்டி!
வதைக்கிறது!
உன்னைப் பார்க்க!
என்னை விட்டு உயிர்மட்டும்!
போகநினைப்பதுபோல!!
உன் நினைவுகளைக்கொண்டே!
வெளி சமைத்து!
விளையாட்டுக்குக் கூட!
பிரிந்து பறக்கமுடியாத!
ஊனப்பறவையாய் நான்…!!
காலச்சுவடுகள் தந்த!
கண்ணீரெல்லாம்!
நீ பேசும்போது மட்டும்!
மாயமாகுவதன் மர்மம் என்ன?!
வெறும் பார்வைகளால் பேசுகையில்!
நீயும் நானும் ஒரேசமயத்தில்!
சிரிப்பது எந்த பந்தத்தில்?!
நான் தனித்த இரவுகளில்!
என்னை வந்து பார்!
அப்போதும் உன்னுடன்தான்!
பேசிக்கொண்டிருப்பேன்!!
எப்போதாவது நாம்!
சந்திக்கலாம்!
அப்போது நான்!
இறந்துவிடாமல் பார்த்துக்கொள்!
உயிர்!
உயிரோடு கலக்கத்!
துடித்துக்கொண்டிருக்கிறது!!
-ஆர்.நிர்ஷன்!
இறக்குவானை

ஏமாற்றங்களின் நெடும் பயணம்

நிந்தவூர் ஷிப்லி
தொடரும் ஏமாற்றங்களின்!
நெடும் பயணத்தை!
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்!
நீ………..!
விடு!
குட்டக்குட்ட!
குனியும்!
என்!
இயலாமையை சொல்ல வேண்டும்!
வரங்களை!
சாபங்களாக்கிய!
தேவதை!
உனக்காகவா நான்!
கடுந்தவம் புரிந்தேன்…?!
எனக்கு!
நிழல் தரும்!
என்றெண்ணிய!
உன் வார்த்தைகள்!
சுட்டெரிக்கும்!
சூரியனாய் பொசுக்குகிறது!
என்னையும்!
மனசையும்…..!
பௌர்ணமி வானில்!
நீ!
என்ன வேண்டுமானாலும் !
செய்..!
ஆனால்!
அமாவாசை வானின்!
நட்சத்திரங்களை மட்டும்!
பிடுங்கி விடாதே…………!
!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்கு பல்கலை!
இலங்கை

குறைப்பிறவி

நிலாரசிகன்
உயிர்த்தெழுதல் சாத்தியமற்று!
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது!
அரங்கேறா கவிதைகள் சில..!
கவிதைகளின் மெல்லிய!
விசும்பல்சப்தம்!
செவிக்கருகில் ஒலித்து!
ஓய்கிறது தினமும்...!
ஓடித்திரியும் பிள்ளையைவிட!
ஊனப்பிள்ளைமீதே!
தாய்ப்பாசம் அதிகமென்று!
உணர்த்த இயலாமல்!
தோற்கிறேன் நான்.!
-நிலாரசிகன்.!
----------------------------------------------------!
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்

காருண்யன் கவிதைகள்

காருண்யன்
கேள்வியில்லாத சடங்கு !
ஆதி பராசக்தி ஆளானது !
ஆடிப்பூரத்திலாம் !
அம்மா சொல்கிறாள் !
ஆசிரியர் சொல்கிறார் !
அம்மன்கோவில் ஐயர் சொல்கிறார் !
அந்த அதிசயத்தை !
ஆர்வத்துடன் கவனித்து !
ஆவணமாக்கி வைத்த !
அ(ஆ)திமானுஷன்தான் யாரோ? !
பத்துரூபா நோட்டு !
!
மானுஷம் என்றது படுபொய் !
விழுமியம் என்றது புழுகு !
சமூகஅக்கறை என்றது பேத்தல் !
நாணயம் என்றது சும்மா !
கண்ணியம் என்றதும் கதைதான் !
விசாரங்களாலென் !
தூக்கம் கலைத்தது !
பஸ் கண்டக்டர் தவறுதலாய்தந்து !
நெஞ்சுப் பாக்கெட்டில் வைத்துக்கொண்ட !
அம்மேலதிக பத்துரூபா நோட்டு. !
!
உச்சம் !
ஊடல் மனைவியை !
தாஜா செய்யவேண்டி !
அப்போது ஞாபகத்துக்கு வந்த !
ஒரு அறுதப்பழசு நகைச்சுவையை !
எடுத்துவிட்டேன் !
அவள் அறுவை என்றுவிட்டு !
விலகியிருக்கலாம் கேட்டுச் !
சிரித்துவைத்தாள் பாருங்கள் !
என்குற்றவுணர்வு !
உச்சத்துக்கு !
எகிறியது அப்போதுதான்! !
வேண்டுவதெல்லாம்.......... !
!
சொர்க்கங்கள் ஏட்டில் இருக்கட்டும் !
நமக்கு இருத்தலும் இவ்வாழ்வுமே போதுமே !
இயற்கை குழம்பாத பூமியும் என்றும் !
பசுமைவயல்களும் பயிர்களும் !
அமைதி காத்திடும் கடலுடன் !
மாசு கலவாத காற்றும் போர் !
மேகங்கள் சூழாத பொழுதும் எங்கள் !
மண்ணும் மரங்களும்தண்ணீரும் !
ஒதுங்க ஓர் எளிய குடிசையும் !
ஒற்றுமை சூழும் கிராமமும் !
உழைக்கச் சலித்திடா மக்களும் !
அன்பில் தளைத்திடுஞ் சுற்றமும் !
புது வையகம் படைத்திடும் ஆசையும் !
வேண்டு வதெல்லாம் இஃதுதான் !
வாழ்வு தன்பாதையில் செல்லுமே......................! !
05.05.1999 !
!
சர்வ நிச்சயம் !
நினைவறிந்த நாளிலிருந்து இருட்டு !
இடுகாடு சுடுகாடு எதுவென்றாலும் பயந்தான் !
அறியாத ஊர்களில் இறுதியூர்வலங்களையும் !
தெரியாத நபர்களின் சவ அடக்கங்களையும் !
முடிந்தவரை விலக்கி நடந்துள்ளேன். !
சர்வ நிச்சயமாய் !
என்னையும் ஒருநாள் !
தூக்கிவந்தொரு காட்டில் !
இன்றிலிருந்து இங்கே தூங்கடா ராஜா !
என்று கிடத்திவிடத்தான் போகிறார்கள் !
இருந்தும் எதுக்கென்றுதெரியவில்லை !
இருட்டு இடுகாடு சுடுகாடு !
எல்லாவற்றுக்கும் இன்னும் பயம்தான். !
!
அண்மையும் சேய்மையும் !
சுயம்வரத்தின் பின் ஸ்ரீராமன் !
சமஸ்கிருதத்தில் முணுமுணுத்தான்: !
உப்பரிகையில் ஜொலித்த அழகு !
அணுக்கப் பார்வையில் இல்லை, ஹ¨ம்

கவிதை

முருகடியான்
குரங்கென ஒருபொருள் குறிக்கிறது!
குலத்தமிழ்ப் பாட்டென விரிகிறது!
திறந்தருங் கதையது விளைக்கிறது!
திரண்டநல் விதையதில் முளைக்கிறது!
வரந்தரும் தையெனும் திங்களையும்!
வைத்தவள் தைத்தவள் தையலவள்!!
ஆறந்தரும் முனைவரின்ழூ விளக்கமிது!
அடுத்தொரு முறையிலும் விளங்குமிது!!
முதலெழுத் தழித்தால் விதையாகும்!
நடுவெழுத் தழித்தால் கதையாகும்!
முதலும் நடுவும் அழித்தால் தை!
வினையும் பெயரென வருவாள்தை!
முதலிரண் டெழுத்தில் பாட்டுவரும்!
முள்மர மேறும் குரங்குவரும்!
முதல்தாய் மொழியின் பெருமையிது!
மூன்றெழுத் தின்ப அருமையிது!!
!
-முனைவர் சுப.திண்ணப்பன்!
பாத்தென்றல்.முருகடியான்

தோழமை மேகமும் காதல் தூறலும்

ஷக்தி
பின்னிய முடிகளின் பிரிந்ததோர்!
கற்றை முடி - உன் காதுகளை!
வருடியதும்,!
அதிலிருந்து பிரிந்ததோர்!
ஒற்றை முடி - உன் கண்ணங்களை!
கோலமிட்டதையும்,!
ஒற்றை விரல் கொண்டு அதை நீ!
அடிக்கடி ஒதுக்குவதையும்,!
ரசித்திருக்கிறேன்…!
அப்போது கூட!
சொல்லியிருக்கலாம் - நான்!
கடற்கரை மணலில் நாம்!
தனியாய் அமர்ந்திருந்த வேளையில்!
“ஆர்டின்” வரைந்துவிட்டு!
அர்த்தமுடன் சிரித்தாயே,!
அதை நானும் ரசித்தேனே..!
அப்போது கூட!
சொல்லியிருக்கலாம் - நீ!
திரைப்பட இடைவேளையில்!
தின்பண்டத்துணுக்கொன்று!
உதட்டோரம் ஒட்டியிருப்பதை!
சொல்ல மனமின்றி - நானே!
அள்ள நினைத்தேனே!- அதை!
நீ ஆமோதித்து ரசித்தாயே..!
அப்போது கூட!
சொல்லியிருக்கலாம் - நான்!
கோவில் பிரகாரத்தில் - எனக்கு!
விபூதி கீற்று அணிந்து விட்டு!
சுண்டலுக்கு அலைந்த என்னை!
கண்களால் கடிந்தாயே!
அதை நான் ரசித்தேனே..!
அப்போது கூட!
சொல்லியிருக்கலாம் - நீ!
சொல்லவே இல்லை எப்போதும்!
நான்,!
தோழமை துரோகம் எனக் கருதி,!
நீயும்..!
தோழமைக்கும் மேலான - ஆனால்!
காதலுக்கும் சேராத..!
புதியதோர் பந்தத்தில் வந்த தோழி!
என் அலைவரிசை கண்ட தோழி!
அமெரிக்கா சென்றுவிட்டாள்!
யார் வீட்டிற்கோ விளக்கேத்த..!
என் வீடு இன்னும் இருளில்..!
தோழமை பார்த்ததில் எனக்கு!
ஓர் தோழமை நஷ்டம் - மேலும்,!
ஓர் காதலும் நஷ்டம் போலும்.!
பெண்மம் பிடித்துப் போனால்!
பெண்மத்திற்கும் பிடித்துப் போனால்!
வன்மம் எதுவுமில்லை.,!
தோழமை நிரந்தரமாக்க,!
தோழமை தாண்டுவதிலும் கூட

கால்களில்லாதவர்களின் நடை

கே.பாலமுருகன்
நடப்பதற்காக!
ஏங்கி ஏங்கியே!
நடப்பதை மறந்திருந்தோம்!!
நடப்பதென்பது சிரமமானது!
என்று எங்களைப்!
பயமுறுத்தி வைத்திருந்தார்கள்!!
நடப்பவர்களை !
அதிசியத்துப் பார்த்தோம்!!
மிரட்டினார்கள்! அதட்டினார்கள்!!
கால்களை உடைத்து!
ஊனமாக்கினார்கள்!!
நடப்பது!
நடக்க நினைப்பது!
நடக்க முயல்வது!
என்ற !
பாவங்களுக்கு!
தனிதனியாக தண்டனைகள்!
வகுத்திருந்தார்கள்!!
சங்கிலியால்!
இறுகக் கட்டி!
தூன்களில் !
சிறை வைத்தார்கள்!!
எக்கி எக்கி!
தவித்தோம்!
உடைந்த கால்களுடன்!!
தவழக்கூட வழியில்லாமல்!
சிலையானோம்!!
சிலர்!
எங்களைத் தெய்வம்!
என்று போற்றினார்கள்!!
தெய்வமானோம்!!
அவர்களுக்கும் தெரியவில்லை!
இவர்களுக்கும் தெரியவில்லை!
நாங்கள் நடக்க!
ஆசைபட்ட கணங்கள்!
பற்றி!!
கே.பாலமுருகன்!
மலேசியா

யுத்தவாசம்

ரவி (சுவிஸ்)
யுத்தம் !
தொலைக்காட்சிகளின் பிரமாண்டங்கள் !
வெடிகுண்டுகளின் பேரோசை !
புகைமண்டலங்கள் காற்றை விழுங்கி ஏப்பமிட !
அதிர்வுகளில் ஈடாடியது !
ஈராக் பூமி !
பதுங்குகுழியுள் ஒளிந்திருக்கும் ஓர் !
குழந்தையின் இதயஒலி !
உயிரோசையாய் அதன் !
குருத்துலகை அதிரச் செய்தது. !
கோரம், !
இதையும்விட வேறெதுவாய்... !
எனக்கு சொல்லத் தொ¤யவில்லை. !
ஆக்கிரமிப்பாளரின் காலடிகளை !
ஈராக்கிய பாலைவனங்களும் அழித்துவிட !
மறுப்பதாய் !
வரலாற்றின் தொடர்ச்சியில் நின்று !
நான் பேசுகிறேன். !
நிச்சயமின்மையாய் !
எரியும் ஒரு திரியின்மேல் வாழ்வு !
ஏற்றப்பட்டதாய் உணர்தல் கொடுமை. !
இன்றோ நாளையோ !
எரிகாயம் பிராண்டிச்சென்ற பிஞ்சுடலாய் !
கால் முறித்தெறியப்பட்ட அல்லது !
இரத்தம் வழிந்து அச்சம்தரும் சிதைவுடலாய் !
போய்விடுமா என் பிஞ்சுகள் என !
ஏங்கும் ஒரு தாயை !
புரிதல்கூடுமோ காண். !
அந்நியன் வந்து எமை ஆள்வதா என !
கொதித்தெழுவது அவர்கள் உரிமை !
வளங்களெல்லாம் களவாடப்படுதல் கண்டு !
எந்தப் பூமியும் பொறுத்துக் கொண்டதாய் !
வரலாறும் இல்லை !
அதனால் படுக துயர் என !
ஒவ்வொரு அமெரிக்க இராணுவத்தையும் !
அழைக்கக் காத்திருக்கிறது !
வரலாறு. !
ரவி (சுவிஸ்) !
040503

உறவை மறந்த சிறகுகள்

இப்னு ஹம்துன்
கரன்சிக் காட்டிற்கு!
கண்கட்டிக்!
கொண்டுவரப்பட்ட!
இன்றைய மங்கை நான்.!
இங்கே!
பக்கவாட்டுச் சிறகுகள்!
பாதச்சக்கரங்கள்!
எல்லாம் முளைத்தன!
யாரும் கேட்காமலேயே!!
பிறப்பில்வந்த கரங்களை விடவும்!
பொருத்தப்பட்ட சிறகுகளில்!
பெருமிதம் அடைகிறேன்.!
'பழம் பாதங்களை விடவும்!
பயனுடையவை!
இப்புதிய சக்கரங்கள்'.!
கற்பிதங்களில் காண்கிறேன் !
அற்புதங்கள்.!
இருந்தும்...!
தொடரோட்டத்தில்!
துரத்திப்பிடிக்க..!
உயிரில்லா உயர்வாக!
பணமென்னும் பட்டாம்பூச்சி!
அதனோடு!
தினம்தினம் கண்ணாமூச்சி.!
நாளைய வானின்!
நூல் பட்டங்களுக்காக!
காகித அட்டைகளுக்கு!
வர்ணம் தீற்றுகிறேன்.!
பள்ளிப் புத்தகத்தில்!
புதையுண்ட நினைவாக!
பழைய மயிலிறகு.!
வானில் பறக்க!
விரைகிற அவசரத்தில்!
தூளிக்குழந்தைக்கான!
தருணங்கள் அமையாமல்!
தேங்கிப்போகுதென் தாய்ப்பால். !
- இப்னு ஹம்துன்
--------------------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953