இருள் கவியும் முன் மாலை - வி. பிச்சுமணி

Photo by Hasan Almasi on Unsplash

கார்மேகம் கரும்போர்வை போற்ற!
கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய் !
அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்!
மணல் அளக்கும் உன் கைபற்றி!
மணமுடித்தல் பேச !
கரை தொட்டு திரும்பும் அலைகளாய்!
என் கையிலிருந்து நழுவியது !
விடுபட்டது உன் கை!
பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்!
யோசிக்க நேரம் வேண்டுமென்றாயே!
அவ்வமயம் நமது காதல்!
மரத்தில் கரையான் ஏறியது!
அரித்து முடிக்குமுன் !
உன் சிந்தனை புல்லினை நிறுத்தி!
கரையான்களை தின்றுவிடு!
காதலிக்கும் போதும்!
உனக்கும் எனக்கும்!
குடும்பம் இருந்தது!
கல்யாணம் எனறால்!
புது உலகத்தில் பிறந்தாற் !
போல் பசப்பாதே !
முழுவதும் இருள் கவியும் முன்!
உள்ளத்தை சொல்லி விடு!
-வி. பிச்சுமணி
வி. பிச்சுமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.