சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த!
காதல் பேச்சில்!
தூக்கம் கலைந்த ஆதவன்!
சினம் கொண்டு சிவந்தான்!
சுட்டெரிக்க பின் தொடர!
மரங்களில் மறைந்தன குருவிகள்!
கோபத்தில் தவறுதலாக கழுகுகளின்!
கழுத்தை கறுக்கினான்!
குருவிகள் கொரில்லா போர் முறையில்!
ஆதவனிடம் விளையாட்டு காட்டின!
நடுவானம் வந்து!
மனிதனை வெறுப்பேற்றினான்!
குடைகொண்டு தன்னாட்சி செய்த!
மனிதனின் அறிவு வியந்து!
சிட்டுக் குருவி மீதான கோபம் சொன்னான்!
ஆதவனுக்கு உதவ!
மனிதன் கைபேசி கோபரங்களை நட்டு!
சிட்டு குருவிகளின் சிறகுகளை!
காட்டுக்குள்ளே முடக்கினான்
வி. பிச்சுமணி