கரையாத வெண்சுருட்டு!
விரல்களிடையே அமர்ந்து!
வாயிக்கும் கைக்குமிடையே!
மீண்டும் மீண்டும் பயணிப்பதாய்!
செங்கலபட்டு மின்தொடர்வண்டி!
நாலவதாக இருக்கு மூன்றாவது நபரை!
நகரச்சொல்ல !
எழுந்து நீங்கள் நல்ல உட்காருங்க!
குத்தல் பேச்சில் கோபாமாகி!
எம்ஜிஆர் வேலை வேண்டாமென சொல்ல!
வாக்குவாதம் முற்றி சணடையாய்!
அசிங்கமாவதை கண்டு அமைதியானேன்!
திங்கள் கிழமைகளில் சணடையும்!
வெள்ளிகிழமைகளில் அமைதியும்!
தொடர்வண்டி பயண விதிதான்!
சண்டையே மறந்து போனாலும்!
பெரியமனுசன்தானே நீ என!
சொன்ன வார்த்தை!
மனதுக்குள் உட்கார்ந்து குடைந்து!
தலைக்கு சாயம் பூச !
வேண்டுமா வேண்டாவா என அலைந்தது
வி. பிச்சுமணி