காணும் கடவுள்கள் - வி. பிச்சுமணி

Photo by engin akyurt on Unsplash

தொட்டில் சேலையை விலக்கி!
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்!
மகளை பார்த்து கொண்டிருந்தேன்!
தூங்கிற பிள்ளையை பார்க்காதே!
என்றாள் அம்மா !
திடீரென தூக்கத்தில் சிரித்தாள்!
கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார்!
என்றாள் அம்மா !
திடுக்கென்று அழுது தூங்கினாள்!
காத்து கருப்பு பயம் காட்டுகிதென!
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை !
வைத்தாள் அம்மா !
மீண்டும் என் மகள் அழ!
அடுக்களையிலிருந்து ஓடிவந்து!
கச்சை பால் கொடுத்தாள்!
என் மகளின் அம்மா!
வி. பிச்சுமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.