வாழ்வும் ஒரு காதல - நவஜோதி ஜோகரட்னம்

Photo by Didssph on Unsplash

்!
--------------------------------------!
இந்த மண்ணுக்குள்!
ரகசியங்கள் புதுமைகள் !
மறைந்து கிடப்பதுபோல்!
எனக்குள்ளும் எத்தனை எத்தனையோ…!
கணங்கள் தோறும்!
என்னுள் கவிதைகள் திரள்கின்றன…!
கவிந்து மிதந்து செல்லும்!
மேகத் திரள்கள்!
நிலவருகே வரும்போது!
ஒளிமயமாகவும்!
விலகிச் செல்லும்போது!
கரிய நிழலாகவும்!
ஜாலம் செய்கிறதே! !
அது அன்றைய நிலவா?!
அதே நிலவுதானே இன்றும்…!
அந்த நிலவு கறள் படிந்து!
நினைவை நனைக்கிறது…!
இரக்கமற்ற பூமியில்!
தினசரி நடக்கிறது போர்…!
நிதம் போகும் உடல்களின் பயணங்கள்…!
மண்ணில் பாய்கின்ற சோக அருவிகள்…!
துக்கங்களை பூசிக்கொள்கின்ற முகங்கள்…!
எனது ராகம் குழைந்து!
குரல் இழைக்கையிலே நீ!
அசிங்கத்தைப் பார்க்கிறமாதிரி !
பெண் என்னை!
முகத்தைச் சுளிச்சுக்கொண்டு !
முறைச்சுப் பார்க்கிறாய்!
பயந்து நடுங்கி!
சுருங்கும் என் முகம்…!
என் மென் உடலில் !
வீரியத்தை வரவழைக்கின்றன…!
வாழ்க்கை குரூரமானது என!
திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டாலும்!
அதன் மீதுள்ள காதலை !
என்னால் உதறமுடியவில்லையே! !
!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
8.7.2008
நவஜோதி ஜோகரட்னம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.