மரணக் காட்சிகள் மறுபடியும் மறுபடியும்;!
பிணக் காடுகளாய்!
மனதில் விரிகின்றன!
நரம்புகளின் வீம்பும்!
விரக்தியும்!
மாறி மாறிப் பாய்ந்து!
நினைவின் கதியால்!
துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன!
மிரண்டு விழிக்கின்ற குழந்தைகளின்!
இளஞ்சிவப்பும் தோய்ந்து!
கண்ணீர்த் துளிகளாகி!
முற்றிலும் உலகை!
மூடித் ததுப்புகிறது கருநீலம் !
வானத்தில் தொங்கும் நட்சத்திரங்கள்!
என்றுமே கண்டிராத ஒரு மாபெரும் பறவைபோல்!
மிதப்பதைப் பார்க்கிறேன்!
தோலைக் கிழித்து !
அலகுகளால் குருதியை உறுஞ்சும்!
ஆசுவாசமான காற்றோடு அளைகின்றேன்!
இன அழிப்பின் அந்த மரண ஓலங்கள்!
என்னை உலுக்கி அசைப்பதை உணர்கின்றேன்!
உறுப்புக்கள் சிதைந்து !
செயலிழந்து ஆசைவின்றி ஆழ்ந்து!
அழுகுவதைப் பார்த்து!
இறப்பு என்ற !
பிரக்ஞைக் குறிப்பு மட்டும்!
எப்படி இன்னும்!
இறக்காமல் இருக்கிறது என்று எண்ணுகின்றேன்!
உண்மை !
உலகத்தில் இரகசியமாகவே உலவுகிறது…!
நம்பிக்கை…!
ஒடுக்கப்படுபவர்கள்!
ஓங்கி எழுவார்கள்…!
உயிர்பறிக்கும் உடமைகள் எல்லாம்!
சுட்டுப் பொசுங்கட்டும்!!
உறுதி வாய்ந்த சூரியன் மெல்லெழுந்து!
வசந்த பருவத்தின் புதுமையிலே!
கத கதப்பைப் பொழிவான்!
உலகத் தமிழர்களின்!
பரவசக் கணங்கள் விரைவில் மலரட்டும்!!
உலகத் தமிழர்களே! !
உயிரிழந்த உறவுகளால் நிலை குலைய வேண்டாம்!
கடுமையான உழைப்பினால் விளைவதே மன!
எழுச்சி என்பதை உணர்ந்திடுவோம்!!
நம்மால் முடியும்!
பீனிக் பறவைகள்போல்!
திரும்பவும்!
உருவெடுத்து வாழ்வோம்! !
!
23.5.2009

நவஜோதி ஜோகரட்னம்