பரம்பரை நோய் - நீச்சல்காரன்

Photo by Sajad Nori on Unsplash

விக்கலில் எகிறிக் !
குதித்த சிறு குடல் !
ஏமாற்றத்துடன் !
புரண்டு படுத்தது!
சுவாசத்துடன் உள்சென்ற !
பிராணவாயு ஓட்டியசுவறொன்றில்!
முட்டிக் கொண்டு!
பெருமூச்சாய் ஏக்கப்பட்டது!
உயிருப்பை உறுதி செய்ய!
பொறுப்பான ஒரு சுய !
சமிக்ஞைக் கருவி !
வயிற்றைவிட்டால் வேறில்லை!
வயிறு உறுமிக் !
காட்டிக்கொடுத்த பசிக்குத் !
ஆயுள் முழுதும் தீனி!
போட்டாக வேண்டும்!
இரண்டு துளைகளுக்கு !
நடுவே நடக்கும் !
பட்டினிப் போரில்!
பசி பிறந்து விடுகிறது.!
பசியோடு தொடங்கியது!
பசிக்கு இயங்கியது!
பசியால் வளர்ந்தது!
பசிக்காக மடியுது உலகு!
புத்தகத்தில் படித்து இதுவென்று !
புரிந்து கொண்டனர் -பணவான்கள்!
பரம்பரை நோய் இதுவென்று !
பழகிக் கொண்டனர் -பாட்டாளிகள்
நீச்சல்காரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.