எங்க ஏரிய உள்ள வராதே - நீச்சல்காரன்

Photo by FLY:D on Unsplash

ஈக்களின் நந்தவனத்தில் ஒரு!
வியாபாரமற்றக் கடை!
எல்லாரும் வாடிக்கையாளர்களே!
சில வேடிக்கையாளர்கள்!
போட்ட கல்லில் கடைஅடைக்கப்பட்டதால்!
இப்போ போக்குவரத்து தடைப்பட்டு!
கழிவுநீர் வீட்டுக்குள் நுழை போடும்!
இந்த சாக்கடை சீராகும் வரை !
கொஞ்சம் அனுசரணையோடு!
பயன்படுத்தினால் ஊருக்குள்!
ரயில்நிலையம் வந்தாலும் வரலாம்!
ஆனால் இந்த கற்சாலை உண்மையில்!
ரயில் பாதைக்குயிடப்பட்டதில்லையாம்!
நம் வாகனத்திற்கான தார்சாலை!
என்கிறார்கள் ஓட்டுக்கு பணம்கொடுத்தவர்கள் !
சாலைக்குயிரு புறமும் சிரித்தமுகத்துடன்!
வளமையான மரங்கள் காட்சிக்கு.!
கோடைகாலத்தில் கொஞ்சம் பெயிண்டும்!
மழைகாலத்தில் கொஞ்சம் தண்ணியும்!
காட்டுவர் எப்போதாவது கட்சிக்கொடியை!
இறக்கிவிட்டு வெட்டப்பட்டபசும் மரங்களுக்கு!
துணையாக இந்த மரத்தையும் மாற்றுவர் !
இலவச நீச்சல் தொட்டிகள் உண்டு!
அதில் குளிக்க அதிக நீருமுண்டு!
நல்ல மழை நேரத்தில் செழிப்பான!
குதுகலமே எங்களுக்கு மிச்சம்!
இரவுகளில் மட்டும் பரணிகளில்!
ஒட்டிக்கொள்வோம் காரணம் வீடுகளை!
பள்ளத்தில் கட்டிக்கொண்டதால் !
நீச்சல்காரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.