ஆய்வு - காருண்யன்

Photo by engin akyurt on Unsplash

ஊரின் கிழக்குக் கோடிதீரம் !
ஓங்கும் நெடிய அத்தி !
சும்மா உலவப்போன காலை !
அதனை மேலே நிமிர்ந்து பார்த்தேன் !
இலை செறிந்தவோர் கிளையில் !
எவரும் கண்படாத மறைவில் !
செக்கல் வானச்சிவப்பில் !
கோரிக்கையற்றுத் தொங்குது !
ஒரு பெரிய தேன் செறிந்த வதை !
தேனீக்கள் ஒன்றும் இல்லாமல் !
கூடு மட்டுந்தனியாக !
தபஸிருக்கக் கண்டேன் !
மழை வந்து கழுவிப்போச்சோ !
கொள்ளைதான் கொண்டு போச்சோ !
முற்றும் கூட்டாகக் கலைந்துபோக !
எரிபந்தம் யார்தான் பிடித்தார் !
கல்லெறிந்து யார் கலைத்தார் !
உயிர் தப்பக் கலைஞ்சு போச்சோ !
உயிர் கொண்டு பிரிஞ்சு போச்சோ !
இங்கே கூடு மட்டும் தனியாகத் !
தொங்கும் சோகமென்ன? !
கூடுவிட்டு கலைந்துபோக !
நேர்ந்ததின் அவலம் என்ன? !
காரணகாரியத்தை நண்பன் !
அறிவானோ !
விண்டுரைத்தேன் பூராவும் !
கேட்ட பின் !
அவன் பகர்ந்தான்: !
தேனீக்கள் எங்கே போனால் !
குறைஞ்சதெனன உனக்கு? !
கண்டவுடன் குலையை !
கெட்டோடு கொண்டராத !
அரைவேக்காட்டுக் கவிஞா....... மூடா
காருண்யன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.