உவமானமில்லாத உவமேயம் - காருண்யன்

Photo by Sven Finger on Unsplash

என் அலர் அகவைகளில் ஒரு நாள் !
அந்த இங்லிஷ்படம் என்னைக் கிளர்த்தும்வரை !
எனக்கு முத்தங்கள் பற்றியோ அதன் !
வகைகள் பற்றியோ சத்தியமாய் ஒன்றுந்தெரியாது !
இங்கிலிஷ் பெண்களுக்கு எங்கேபோவது !
ஆனாலும் முத்தம் தரக்கூடிய !
அனைத்துப் பெண்களிடமும் !
தவறாது பெற்றுக்கொண்டேன் !
ஒவ்வொரிவரிடத்தும் !
வார்த்தை வயப்படுத்தமுடியாத !
ஒவ்வொரு சுவை !
தேனென்றும் கள்ளென்றும் கனியென்றும் !
சொல்லப்பட்டிருக்குத்தான் !
ஆனாலும் அது !
உவமானம் இல்லாத உவமேயம் !
அந்த மூன்று நாட்களிலும் !
ஆரோக்கியக் குறைவானவேளையிலும் !
(சம பாலாரிடமும்) !
இதழ்கள் அவ்வளவாய்ச் சுவைப்பதில்லை !
நான் முதலிரவில் ஸ்ராராமனாய் !
அவளை அணைத்து !
முத்தம் தந்தானதும் கேட்டாள்: !
பிரண்டையைக் கடிச்சமாதிரி !
என்னாங்க இது?
காருண்யன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.