லண்டனின் லட்சணம் - சத்தி சக்திதாசன்

Photo by Jorge Zapata on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
சாராமாரியாக பறக்கின்றன !
சத்தத்துடன் வாகனங்கள் !
முற்று முழுதாய் தம்மை உடைகளினால் !
மூடிய மனிதர்கள் !
முழுதாய் விடிவைக் காணாமலே !
மூச்சிறைக்க ஓடும் !
முதல் உலக மாந்தர்கள் !
தேடியும் கிடைக்கா சூரிய ஒளியை !
தேடிப் பூங்காக்களில் தவமிருக்கும் !
தேர்ந்த மக்கள் !
அவசரமான வாழ்வை !
அவசரமாய் வாழ்ந்து !
அவசரமாய் முடித்து !
அடங்கியே விடுவர் !
பனிக்கட்டிகள் தலைமேல் விழுந்தும் !
பக்கெட்டில் வாங்குவார் கட்டி ஜஸை !
மழை பெய்தால் நகரெங்கும் !
மடைதிறந்த வெள்ளம் !
பனிப்பெய்தால் சாலையெங்கும் !
பழுதடைந்து நிற்கும் வாகனங்கள் !
காற்றடித்தால் தெருவெங்கும் !
கட்டையாய் சரிந்திடும் மரங்கள் !
இலையுதிர் காலமென்றால் !
இயங்கமறுக்கும் புகையிரதம் !
இல்லையா இங்கே இனிமையான உணர்வுகள் ? !
இரவிரவாய் மதுவருந்தி , இல்லம் !
இருந்து இரா நிலயில் அவர்க்கு ஓர் மகிழ்ச்சி !
கோடைகாலத்திலே !
கோலங்களைப் பார்க்கணுமே !
உடலை மூடும் உடையெல்லாம் !
உண்மையாக ஒரு முழமே !
அதுவும் ஓர் மகிழ்ச்சி அவ்ர்களுக்கு !
வெப்பம் கூடினால் ஓடிடுவார் !
வெண்மணற் கடற்கரைக்கே !
ஆசிய மக்கள் எமக்கெல்லாம் !
அடிமனதில் !
அடங்காத எண்ணமொன்று !
நிறத்தாலே எமைப் பிரித்து !
நிச்சயமாய் !
நீங்காத வேற்றுமை அளித்திடுவார் !
நினைவெல்லாம் இதுவேதான் !
என்னவென்று சொல்லுவேன் ? !
திறமை உண்டென்றால் தடையின்றி !
திறக்கும் வழி எமக்கு இவ்வூரில் !
கல்வி கற்பதற்கு உள்ள வழிமுறைகள் !
கடைசிவரை !
கைகொடுக்கும் !
உழைத்துவாழ இங்கு !
உண்டாமே பலவழிகள் !
உண்மை மனிதர் பலருண்டு !
உள்ளம் ஒன்றே அவர் சொத்தென்று !
நிறங்கள் பிரிவினை !
நிறைந்ததிங்கென்றால் !
நிறைவாய் வாழும் பல தமிழர் !
நிறைவதன் மர்மமென்ன? !
ஒன்று சொல்வேன் கேளீர் ! !
லண்டன் என்னும் நகர் !
லட்சங்கள் பலவற்றை !
லட்சியத்தோடு வாழும் !
லட்சண மனிதருக்கு அளித்ததுண்டு !
காலநிலை !
கவலைதான் !
நிறப்பிரிவும் நிஜம்தான் !
ஆனாலும் தோழனே !
தாயகத்திற்கடுத்து எமை !
தாலாட்டி வளர்த்த !
தரமான லண்டன் !
தப்பாமல் லட்சணம்தான்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.