இரண்டாம் தாய் - அன்பாதவன்

Photo by FLY:D on Unsplash

தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை !
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் !
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை !
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை!
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும் !
மவுனம்கவிந்த பொழுதுகள் !
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு !
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள் !
பாறையாயிருந்தேன்; !
சிற்பமானேனுன் செதுக்கலில் !
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா !
கடன் பெற்ற நெஞ்சம் !
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய் !
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை.!
OOOOO !
அன்பாதவன் !
2006
அன்பாதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.