தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பூங்கொடி

அகரம் அமுதா
நிலவுச் செவிலியின்!
மேற்பார்வையில்!
மலர் குழந்தைகளைப்!
பெற்றெடுக்கும் நான்!
ஈன்ற பொழுது!
பெரிதுவக்கும் தாய்...!
!
ஈன்ற சேய்க்கும்!
தாய்ப்பால் வழங்காப்!
பெண்களிடையே!
ஈன்ற தாய்போல்!
வண்டுகளுக்குத்!
தேன்பால் ஊட்டுகின்ற!
என்னை யாரும்!
மங்கையற் குவமைசொன்னால்!
மனம் வெதும்புகிறேன்...!
!
*!
நான்!
மன்மதன் அம்புகளை!
மலிவு விலைக்குத்!
தயாரித்தளிக்கும்!
முன்னோடி நிறுவனம்...!
!
மலர் வகையராக்கள்!
யாவும்!
இயற்கை வயாகராக்கள்!!
!
கொடுங் காமுகரும்!
மலரை முகராது!
மங்கையரை நுகர்வாரில்லை...!
!
ஏனோ!
நட்சத்திர மலர்கள்!
தூவப்பட்ட!
வான மெத்தையில்!
நிலவு மங்கை காத்திருந்தும்!
சூரிய மணாளன்!
கிரணத்தன்று!
பலரறிய நன்பகலில்!
கலவி புரிகின்றான்!!
!
* !
பெண்களைப் போல்!
நானும்!
பூப்படைகின்றேன்...!
இரவெனும் முறைமாமன்!
இருட்குச்சி!
கட்டிய பின்னரே!
பூப்படைகிறேன்...!
நட்சத்திர அத்தைமார்களின்!
நலிங்குடன்!
நிலவொளியில் மஞ்சல்!
நீராட்டு விழா...!!
!
பெண்கள்!
தலையில் பூவைப்பது!
என்னைப் பார்த்துத்தான்!!
என்னை!
அமங்கலி யாக்கியே!
பெண்கள்!
சுமங்கலி யாகின்றனர்...!
அவர்கள்!
அமங்கலிகளாகக்!
காட்சிதரக் கூடாதென்றே!
நான்;!
சுமங்கலி யாகின்றேன்!!
அமங்கலிகளுக்காய்!
நான் என்!
மலர்கள் உதிர்த்து!
மலராஞ்சலி செலுத்துவதும்!
உண்டு!!
!
* !
புன்னகை புரிவதில்!
எனக்கு ஈடுசொல்ல!
யாருண்டு இங்கே?!
உங்களால்!
புன்னகைக்க முடியவில்லை!
என்பதால்!
என் உதடுகளைக்!
காம்புடன் கிள்ளுவதோ?!
மலர்கள் என்!
முகங்கள் ஆகுமென்றால்!
என்னை!
கழுத்துடன் கிள்ளி!
தூக்கிலிடுவதோ?!
என்!
அங்கங்களை ஆய்ந்து!
அங்கங்கே தொங்கவிட்டிருக்கும்!
பூக்கடைகள் யாவும்!
கசாப்புக் கடைகளேயன்றி!
வேறென்ன?!
நீங்கள்!
திருமண சடங்குகளுக்காய்!
என்னிடம் வந்தால்!
மகிழ்வோடு தலைகுனிகிறேன்...!
பிண வீதிக்குப்!
பூமெத்தைகள் தேடி!
என்னிடம் வந்தால்!
அழுத வண்ணம்!
தலை குனிவிக்கப் படுகிறேன்!!
!
-அகரம்.அமுதா

மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்

வித்யாசாகர்
01.!
மரணமும்..!
-----------------!
தடியூனி நடக்கும் கனவு அது!
இடையே மரணம் வந்து வந்து!
காலிடறிச் சிரிக்கிறது..!
காதுகளில் அழுபவர்கள்!
ஆயிரமாயிரம் பேர் - சற்று!
காதுபொத்திக் கேட்கிறேன்; என்!
மகள் அழுகிறாள்,!
எட்டி உதைத்தேன் அந்தக் கனவை!
ஐயோ என்று!
எமன் கத்திய சப்தம்;!
எவனானால் என்ன!
என் மகளினி அழமாட்டாள்...!
!
02.!
மூப்பும்!
------------!
இரவுகளின் தனிமையில்!
சன்னமாக எரியும் சிமினி விளக்கின்!
வெளிச்சத்தில் - ஒரு!
பழைய துணிகளை அழுத்தி நிரப்பிய!
தலையனைப் போட்டு -!
வாசலில் படுத்திருக்கிறேன்..!
உறை துவைத்தோ!
தலையனைப் பிரித்துப்போட்டு வெய்யிலில்!
காயவைத்தோ பல நாட்கள்!
கடந்து விட்டதன் லேசான நாற்றத்தில்!
என் -!
முன்புநான் திட்டியக் கடுஞ்சொற்களெல்லாம்!
நிறைந்துக் கிடந்தன..!
படுத்திருந்த கோரைப்புல் பாய் கூட!
நைந்து பிய்ந்து!
முதுகைப் போட்டு பிராண்டியெடுத்தது!
அதில் வலித்துக் கொண்டிருந்தது அந்தப்!
பழைய நினைவுகள்..!
அவளைப்போல் வராது!
அவளுக்குத் தான் தெரியும்!
இப்படியெல்லாம் படுக்க எனக்குப்!
பிடிக்காதென்று!
முகத்தை!
மஞ்சள்பூக்கப்!
பார்த்துக் கொள்வாளோ இல்லையோ!
தரையை!
கண்ணீர்விட்டு கழுவி வைத்தவள் அவள்;!
நானென்றால்!
அவளுக்கு அத்தனைப் பிரியம்!
என்னைப்!
பெறாத மடியில் தாங்கி!
பொசுக்கெனப் போகும் உயிருக்குள்!
எத்தனைப் பெரிய - மனதைவிரித்துச் சுமந்த!
தாயவள்..!
அவளின் மஞ்சக் கயிற்றில் கூட நான்!
அழுக்குப் பட்டதில்லை..!
இப்போது கூட!
இங்கு தான் எங்கேனும் இருப்பாள்; இந்த!
அழுக்குத் தலையனையின் வாசத்துள்!
ஏதேனுமெனதொரு சட்டையினுள்!
அவளின் வாசமாக அவளிருப்பாள்..!
ஒருவேளை..!
ஒருவேளை!
எனது கடுஞ் சொற்கள் உள்ளேயிருந்து!
அவளுக்குக் குத்துமோ?!!!
இல்லையில்லை!
அதையெல்லாம்!
இனி எனது கண்ணீர் துடைத்துப் போட்டுவிடும்..!
!
03.!
மாங்காய்ச்சோறும்!
---------------------------!
அதெப்படி!
இன்றிருந்து விட்டு!
நாளை இல்லாதுபோய்விடுமெனக்கு!
இத்தனை ஆசைகள்.. ஏன்?!
என் ஆசைகளில் ஒன்றினைக்கூட!
செறிக்கவில்லையே; எனது நரை.. (?)!
நடந்து நடந்துத் தீர்ந்திடாத!
எனது காலடிச்சுவடுகளும்,!
காலத்தைச் சொட்டியும் தீராத!
வியர்வையும்,!
சொல்லிமாளாத ஏக்கங்களும்!
எனக்குள் இருளுள்பொதிந்த முகத்தைப்போல!
மரண நிறத்தில் தெரிகிறது;!
ஏதேதோ செய்து!
கிழித்துவிடும் மதப்பில்!
நிறைவேறாமல் நீர்த்துவிட்ட!
நிறைய கனவுகள்!
பணத்திற்குள்ளும்!
இடத்திற்குள்ளும்!
பொருளிற்குள்ளும்!
பதவிக்குள்ளும் அசிங்கமாகயிருப்பது தெரிகிறது;!
அவைகளையெல்லாம்!
எரித்துப்போடாத மூப்பிது; அசிங்கமான!
வாழ்க்கை,!
நிர்வாணத்தை மூடி மூடி வைத்த!
நாற்றம் கொண்ட மனசு இது;!
பசி!
வலி!
பயம்!
கோபம்!
அது பிடிக்கும்!
இது பிடிக்கும்!
மாங்காச் சோறு ருசி..!
மன்னிக்கத் தெரியாது!
மதிக்க மதிக்க வாழனும்!
இந்த ஜாதி அந்த மதம்.. ச்ச.. ச்ச..!
என்ன மனிதனோ நான் -!
எனக்காகப் பாவம்!
தெருவெல்லாம் பூப்பறித்து!
வழியெல்லாம் போடப்போகிறார்கள்..!
ஒ பூக்களே.. பூக்களே!
ஓடிவாருங்கள்..!
உங்களின் காம்பறும்முன் ஒருமுறைப்!
பூத்துகொள்ளுங்கள்; நான் போய்விடுகிறேன்!!!
போய்விடுகிறேன்

ஏற்கனவே சொல்லப்பட்டவை

மு. பழனியப்பன்
மு, பழனியப்பன் !
இது இப்படித் தான் !
இவன் இப்படித்தான் !
இவையெல்லாம் !
ஏற்கனவே சொல்லப்பட்டவை !
!
புதிதாக ஒன்றும் !
புறப்படப் போவதில்லை !
பழைய செய்திகள் !
பழைய தத்துவங்கள் !
பழையன !
புதிதாக ஒன்றும் உருவாவதில்லை !
ஓடும் நீரில் !
அருந்தும் போது மட்டும் !
சுவை தெரிகிறது !
அதனால் அது புதுமையுடையதாகிறது !
!
நூலகப் புத்தகங்களைப்போல !
பழைய வாசனை !
புதிதாய் எதுவும் இல்லை !
நமக்குத் தெரிந்து கொள்ளும் எல்லாம் !
நமக்குப் புதிது !
ஆனால் பழையது !
வேண்டும்போதெல்லாம் !
பழையதை புதுப்பித்துக் கொள்கிறோம் !
!
அதுவே !
பழமையின் புது வடிவம

குழந்தை

கொ.நூருல் அமீன்
குழந்தை -!
ஓர் விஞ்ஞான வியப்பா?!
ஓர் அற்புதப் படைப்பா?!
குழந்தை -!
கடவுளின் அருளா?!
அவனின் பொருளா?!
குழந்தை -!
இனம் பெருக்கும் பிறவியா?!
அறிவு சேர்க்கும் அமுதசுரபியா?!
குழந்தை -!
வாழ்க்கை ஆனந்தத்தின் பன்னீரா?!
அதன் அவலங்களின் கண்ணீரா?!
குழந்தை -!
செலவான உறவுகளின் அழகா?!
செல்லாத உறவுகளின் அழுக்கா?!
குழந்தை -!
அவசரக் காதலின் முத்தமா?!
தேதி குறிக்காத முகூர்த்தமா?!
முடிந்துபோகும் அந்த முத்தமா?!
குழந்தை -!
தனித்திருக்கும் தாய்மார்களுக்கு!
சவால்களை சமைத்த போராட்டமா?!
சங்கடங்களை கிழிக்கும் பேரின்பமா?!
குழந்தை -!
மனித வளர்ச்சிக்குப் பாலமா?!
சமுதாய பிரச்சனைகளின் பள்ளமா?!
குழந்தை -!
உலகின் எதிர்கலாமா?!
வளர்ந்து வரும் அடிமை எந்திரங்களா?!
குழந்தை -!
அடுத்த அப்துல்கலாமா?!
போர்க்களத்தின் மனித அணுகுண்டுகளா?!
!
குழந்தை -!
அனாதையென தெரிந்தால்!
பிறப்பது பாசமா?!
பார்த்தால் பாவமா?!
குழந்தையெலாம் ஓர் வினா!!
ஓர் வாழ்க்கை வினா.!
விடை தருவது நாம்!
அதை நன்று சிந்தித்து சீர்தூக்கி!
சிறப்பாய் எழுதுவோம் நாம்

2013...

ரவி (சுவிஸ்)
இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற !
ஓவியங்கள் உருவழிந்துபோன !
வரலாற்றை பனிக்கால தேவதைகள்!
நிலமெங்கும் மலையெங்கும்!
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்!
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். !
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.!
நதியிடம் சொல்லி !
அல்லது சொல்ல முயற்சித்து!
மறைந்துபோகின்றனர் அவர்கள்.!
எனது கடந்தகாலத்தின் சிதறல்களை!
அதன் துகள்களைக்கூட இந்த நதியின் !
இரைச்சல்களிடம் வீசியெறிகிறேன்.!
அது திரண்டு திரண்டு அழிகிறது.!
முகில்களின் மடியினில் கிறங்கிப்போன !
நதியைப் பெயர்த்துவிட்டு!
நான் புகுந்து, இப்போதான்!
நாளிகையாகிப் போயிருக்கலாம் !
அல்லது !
பல மணி நேரமாகவும் இருந்திருக்கலாம்.!
நான் இறகாகிப் போய்!
பறவையொன்றை வெளியெங்கும் !
மிதக்கவிட்டிந்தேன். !
பின்னொருநாள்!
முகில் கோதியுதிர்த்த என்; துளிகளில்!
நனைந்து சுகம் கண்டாள் என்னவள்!
நதியிலும் விழுந்தன என் துளிகள்.!
ஈரத்தின் குருத்துகளில் வழிந்த!
நிறங்களையெல்லாம்!
அவள் கூந்தலின் நுனிகள்!
எதற்காக சேர்த்து வைக்கின்றன.!
ஒருவேளை !
உருவழிந்த நம்பிக்கைகளை !
வழமைபோல் மீண்டும்!
ஓவியமாய் அவள் வரைதல்கூடும். !
அதன் தொகுப்பை!
2013 என பெயரிடவும் கூடும்.!

இது உனக்கும் எனக்கும் தான்

சேயோன் யாழ்வேந்தன்
பாதிக்கப்பட்ட பின் !
போராடத் துணிந்தால் !
நீ என்ன புரட்சிக்காரன் !
பழிவாங்குவதற்காய் மட்டும் !
ஆயுதம் ஏந்துபவனா !
சமூகக் காவலன்? !
உசுப்பிவிட்டால் தான் !
எழுந்திருப்பேன் என்றால் !
நீயா போர்வீரன்? !
ஓர் அபயக்குரல் போதாதா !
போர்ப்பரணி பாட !
சக f¦விக்கு இழைக்கப்படும் !
ஓர் அநீதி போதாதா !
யுத்தம் செய்ய !
சுய இழப்புக்காய்க் காத்திராதே- !
அழைப்புக்காய்

மனகவலை ஏதுமில்லை

கருவெளி ராச.மகேந்திரன்
அந்த ஒருவழிப் பாதையிலே... !
உனக்கு வழிவிட்டு எதிர்முனையில் காத்திருப்பேன்...!
நான் உனைக் காண கிடைக்கும் ஓரிரு மணித்துளிக்காக! அதை நீ அறிந்திருக்க!
வாய்ப்பில்லை தான்... !
ஒரு வெயில் கால மழையில் வரும் மின்னல் போல... !
முடிந்து போகும் அந்த கணங்கள் தான் என் வாழ்நாளுக்கு எல்லாம் வெளிச்சம்!!
என்றிருந்தேன்... !
அதை நீ அறிந்திருக்க !
வாய்ப்பில்லை தான்... !
இதோ... மாலை மாற்றி... !
உனக்கு நான்... !
எனக்கு நீ என ஆன இந்நொடியில்... !
அந்த ஒரு வழிப்பாதையை!
ஓடோடி நீ கடந்தது... !
என் விழியின் வழியே பாயும் அன்பில் அங்கேயே சிலையாகி போவதை!
தவிர்க்கத்தான் என்கிறாய்! வாழ்க்கையை நினைத்து புன்னகைக்கிறோம்... !
நீயும் நானும்! மனம் அறிந்தால்.... மனக்கவலை ஏதுமில்லை... - என்று எங்கோ படித்ததாய் ஞாபகம்!!
கருவெளி ராச.மகேந்திரன் - தேனி

தமிழ் படிப்போம்

வேதா. இலங்காதிலகம்
வாருங்கள்! வாருங்கள்!!
வண்ணத் தமிழ் படிப்போம்.!
வசீகரத் தமிழ் படிப்போம்.!
வளமான தமிழ் படிப்போம்.!
ஆரியத்தின் மூலமொழி!
திராவிடத்தின் தாய் மொழி.!
உலக முதன் மொழியென்று!
மொழிந்தார் பாவாணர்.!
ஓளவை மொழி பயில்வோம்.!
வள்ளுவர் மொழி படிப்போம்.!
கள்ளமற்ற நல்வழியால்!
வெள்ளை மனமாய் வாழ்வோம்.!
வளர்ப்பது தமிழெனும் எண்ணத்தால்!
வளமான தமிழ் பாய்ச்சுவோம்.!
வாக்குத் திறமை கூட்டி!
வசீகரத் தமிழாய்க் கொட்டுவோம்.!

கவிதைத் தீவு

றஞ்சினி
ஆகாயமாக!
விரிந்து கிடக்கும் !
கடலின்னலை தாலாட்ட!
தென்னை மரக்கீற்றடியில்!
பஞ்சுமணல் தரையில்!
பறவைகள் துயிலெளுப்ப!
ஒருபொழுதேனும்!
கண்விழிக்கவேண்டும் .... ....!
எமை இணைத்த விடுதலை!
உலகெங்குமாய் விரிய!
இயற்கையைத் தின்று!
சூரியன் சுட்டெரிக்கும்வரை!
அங்கேயே கிடப்போம் !
பலகதைகள் பேசி!
உன்னை நான் கவிதையாக்க!
என்னை நீ ஓவியமாக்கு!
எம் கனவுகளை நிஜமாக்கும்!
அந்த அழகிய தீவு .!
-- றஞ்சினி

இரண்டாம் தாய்

அன்பாதவன்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை !
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் !
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை !
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை!
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும் !
மவுனம்கவிந்த பொழுதுகள் !
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு !
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள் !
பாறையாயிருந்தேன்; !
சிற்பமானேனுன் செதுக்கலில் !
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா !
கடன் பெற்ற நெஞ்சம் !
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய் !
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை.!
OOOOO !
அன்பாதவன் !
2006