தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன

றஞ்சினி
பயத்துடனான முகங்கள்!
நிறைந்த தேசத்தில்!
விலங்குகளின் !
நடமாட்டமும் !
குறைந்தே இருந்தது!
நேற்றுவரை இருத்தலுக்காக !
குரலை உயர்த்தியவள்/ன்!
இன்று வீதியில்!
இறந்து கிடக்கிறாள்/ன்!
பாடசாலை மாணவியிலிருந்து!
வீட்டிலிருக்கும் தாய்வரை!
எப்பவும் நடக்கிறது, நடக்கலாம்,!
ஒரு ஆயுதம் வாங்குவது!
பட்டினியால் இறக்கும்!
உயிர்களை விட!
அவசியமாகிறது இவர்களுக்கு !
அதிகாரங்களில் மனிதர்கள் !
இன்மையால்!
மனித உரிமைகள் !
பறிபோன தேசத்தில்!
ஆயுதங்களும் பொய்களும் !
சுதந்திரமாகவே உலாவித்திரிகின்றன.!
--றஞ்சினி

இன்று என்ன ஆனது?

சிதம்பரம் நித்யபாரதி
இன்று!
என்ன ஆனது?!
வைகறைப் பறவைகளும் வரக் காணோம்.!
ஏதோ!
இரகசியம் விழுங்கிய தோரணையில்!
தலையும் அசைக்காத தோட்டச் செடிகள்.!
புன்னகை மலர்த்தாப் பூக்கள்.!
வானத்து நீலமும் வெள்ளியும் கூட!
மாறா ஓவியத் திரையாய்த் தலைமேல் கவிய...!
கண்களை மூடிக் கொண்டேன்.!
பின்காதில் காற்று கிசுகிசுத்தது:!
அசைவே அசைவின்மை!
அசைவின்மையே அசைவு.!
கண் மடல் அவிழ்த்தால்!
கணத்தினில் பார்வையைப் புதுக்கும் மலர்கள்.!
வண்ணவில் தோன்றும்பார் என நீலமேகம் போர்த்தி!
ரசவாத உறுதியளிக்கும் வானம்...!
இன்று !
என்ன ஆனது? !
!
--- சிதம்பரம் நித்யபாரதி

கொஞ்சமேனும் வேண்டாமோ?

கலைமகன் பைரூஸ்
மண்ணெய்யாலும்!
மசகினாலும்!
வயிறு வளர்க்கும் நாடுகளே...!
உலகமயமாக்கப்பெயரோடு!
கலாச்சாரத்தை!
பூண்டோடு அழிக்கும்!
மேற்கத்தேயமே...!!
உங்களிடம் நாம் பணிபுரிவதை!
நீங்கள் தப்பாக்க் கணக்கிடுகிறீர்கள்!
பொதிசுமக்கும் மாடுகளாய்!
கைப்பொம்மைகளாய்!
உங்களுக்கு நாங்களா?!
நீங்கள் தங்க்க்கிண்ணங்களில்!
உடல்மினுக்கும் பெண்களை!
சுவைத்துக்கொண்டு!
அருந்துவதெல்லாம்!
எங்கள் உதிரமும் வியர்வையும்!
மாடாகப் படுத்துகிறீர்கள்!
திரும்பிக்குத்தவும்!
எங்களுக்குத்தெரியும்!
உங்கள் நாட்டில்!
வயிறுகழுவ வந்துவிட்டோம்.!
உங்கள்மீது கோபமில்லை!
என்கோபமெல்லாம்!
இறையாண்மையை அழித்து!
மேலாண்மையை வகுத்து!
சொல்லாண்மையை!
தட்டிப்பறித்த!
உன் ஈசலின்மீதுதான்....!
ஒருவருடத்துக்குள்!
ஓரிலட்சம் ஆண்டுகளின்!
வேலை வாங்குகிறீர்கள்!!
'இன்ஸான்...'!
கூடிக்கூடிப்போனால்!
அறுபதோ அன்றேல்!
எழுபதோதான் அநுபவிப்பான்...!
நாங்கள் என்ன!
உங்களைப்போல்!
மா... மரமனிதர்களா என்ன?!
எங்கள் மனவலியின்!
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்!
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்!
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
உரத்துப் பேசாதீர்கள்!!
கருவிலிருந்து!
வெளியேவிட்டவனைப் பயப்படுகிறோம்...!
மாடுபடாத பாடுபடுகிறோம்!
கோடான கோடிபெறுகிறீர்கள்!
எங்கள் வேதனை!
எங்கள் மனவலி!
உங்களுக்குதெரியப்போவதில்லை!
ஒன்று மட்டும் உண்மை!!
எங்களுக்கு!
உங்களுக்குள்ள!
பாரிய நோய்கள் இல்லை!
அவனே மாபெரியோன்....!!
ஓரிரு ரியால்களை!
ஓரிலட்சம் டாலர்களாய்!
பார்க்கிறீர்கள்.....!
ஓரிரு டாலர்களைவைத்து!
ஆன்மாவை மறக்கிறீர்கள்....!
மாமனிதன் என்ற!
மாபெரும் பட்டங்கள் எல்லாம்!
பரீட்சை எழுதாமலே!
உங்களை அடைகின்றனவே!!
கொஞ்சம் மனம் வையுங்கள்!
நறுமணம் வீசலாம்!
உங்கள் அழுக்குகளை!
உங்கள் அசிங்க அறைகளுக்குள்!
கைவிலங்கிட்டு வையுங்கள்!!
ஓரிருநாட்களேனும்!
எங்களையும் வாழவிடுங்கள்!
எங்கள் உழைப்பில்!
உப்புச்சாப்பிட!
உயிர்கள் காத்துக்கிடக்கின்றன.!
உயிரோடு ஒட்டிப்பிறக்காத்தை!
உங்கள் காசாலேயாவது!
பெறமுயலுங்கள்!
எங்கள்வலி புரியும்!
உங்கள் வழிதெரியும்

சாபமல்ல

பாண்டித்துரை
என் வாழ்வில் !
எனக்கு கிடைத்தது !
கிடைக்கப்போவது !
எதுவுமே !
சாபமல்ல! !
படைத்த பிரம்மன் !
பார்த்துப் பார்த்து !
கொடுத்த வரம்! !

துயரிசை

விசித்ரா
மயானக் குருவியின் இசைக்குறிப்பில்!
எனது குரலின் துடிப்பு !
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது!
அது !
துயரங்களை அள்ளிவந்த காற்றின்!
இழையறுத்து சுதியும் லயமும் சேர ஆலாபிக்கிறது!
நெஞ்சுக்குள் எரியும் நெருப்பும்!
மீள மீள உயிர்க்கும் துயரங்களுமே!
பாடுபொருளாகின்றன!
கிளைவிரிந்த எனது மன வெளிகளில்!
இன்னும் ஒளியெறிக்கவில்லை!
காற்று வீசவில்லை!
இலட்சிய விம்பமும் !
துன்பியல் சாயமிடப்பட்ட காதலும்!
எண்ணிமுடிக்க முடியாத தோல்விகளுமே!
வாசனையோடு பூத்திருக்கின்றன!
எந்தச் சாமியும் இந்தப் ப+க்களை!
பூசைக்கு ஏற்கவில்லை!
என் வாலிபத்தோடு வலிகளே நெருக்கமாயின!
வலிகளைத் தாண்டி புறப்படும் நேரம்!
மயானத்தின் வெளிகளிலெல்லாம்!
இசைவிரிகிறது!
துயரம் நிறைந்த எனது குரலின் துடிப்புகளோடு!
- விசித்ரா

முதல்வன்

கிளியனூர் இஸ்மத் துபாய்
ஆதிமனிதன் ஆதமே!
அகிலத்தின் முதல் மனிதன்!
அதனால்!
ஆண்டவன் சொல்கிறான்!
ஆதமேஆதி முதல்வனென்று…!
வாழ்க்கையை பலர்!
போட்டிகள் நிறைத்து!
பேட்டிகள் கொடுத்து!
வாய்மையை குலைத்து!
பொய்யன்பை வளர்த்து!
போலிபுன்னகையுடன்!
வாழ்வை வென்றதாய்!
நகைக்கும் இவர்கள்!
நவிலலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
நாட்டை ஆள்பவர்களும்!
நடனம் ஆடுபவர்களும்!
நளினமாக இருப்பவர்களும்!
சொல்லலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
கற்றதை கற்ப்பிப்பவர்களும்!
கல்லூரி மாணவர்களும்!
விற்பனை விற்பண்னர்களும்!
கற்;பனை கலைஞர்களும்!
கதைக்கலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
அருள் வழங்கும் சாமியார்களும்!
பொருள் குவிக்கும் குபேரர்களும்!
இருள்மொழி அரசியல் வாதிகளும்!
மருள்மொழி வழங்கலாம்!
நாங்கள் தான் முதல்வனென்று…!
முகத்திரை விலக்கினால்!
அகத்திணை மலரும்!
முதல்வனாய் முகடம்சூட!
முன்னுரை வேண்டும்…!
முதல்வன் - அவன்!
முழுமணி மதியானவன்!
மனிதர்களில் மனிதனாக!
வாழ்பவன்!
மனித நேயத்தை சுவாசிப்பவன்!
தான் யாரென்ற மெய்யறிவு!
நிறைந்தவன்!
மதம் பேதம் இல்லாமல்!
பதமை நிறைந்த இதயவன்!
சோதனைகளை!
சாதனையாக்குபவன்!
எண்ணத்தில் ஏழையாகுபவன்!
தர்மத்தை தர்மம் செய்பவன்!
அன்பை விளைவிப்பவன்!
அவனே சம்பூரண மனிதன்!
அவன் தான்!
இந்த அகிலத்தில் முதல்வன்…!!

விடுதலை

மு. பழனியப்பன்
மு. பழனியப்பன்!
யாருக்காகவும்!
பணிந்து போகத் தேவையில்லை!
பதவிப்பிரியர்கள்!
பதவியைப் பெரிதாக மதிக்கிறார்கள்!
பதவி முடிந்த அடுத்தநாளில்!
யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்று!
தேம்பி அழுகிறார்கள்!
பணப்பிரியர்கள்!
பணத்தைப் பெரிதாக மதிக்கிறார்கள்!
நாளைக்கே பணம் வற்றிப்போனால்!
கையேந்தக் கூட ஆளில்லாமல் போகலாம்!
சுயப்பிரியர்கள்!
தன்னைப் பெரிதாக மதிக்கிறார்கள்!
தன் காற்று மாற்றி வீசினால்!
சுயம் காணாமல் போகலாம்!
எது எப்படியானாலும்!
பதவிக்காகவோ!
பணத்திற்காகவோ!
சுயத்திற்காகவோ!
மற்றவர்கள் பணிந்து போகவேண்டும் என்று!
எண்ணுவதில்தான் சிக்கல் இருக்கிறது.!
யாருக்காகவும் எதற்காகவும்!
பணிந்து போகாதவர்கள்!
யாரையும் பணிந்துபோகக்!
கட்டாயப் படுத்த மாட்டார்கள்

உரிமையில்லை

கார்த்திக் எல்
பிறப்பில்!
இருந்து இறப்பு வரைக்கும்!
எங்கும் குடுக்க வேண்டும்!
லஞ்சம் !!!!
மாக்களின் உணவில்!
இருந்து - விஞ்ஞான!
கண்டுபிடிப்பு வரை!
சர்வமும் ஊழல் மயம் !!!!
பள்ளி சேர்க்கையில்!
இருந்து!
கடவுளின் கருவறை வரை!
எங்கும் தேவை!
சிபாரிசு !!!!
ஓட்டுக்கும்!
காசு - நம் உரிமையை!
அடகு வைத்தப் பின்!
லஞ்சத்தை கேள்வி!
கேட்க உரிமையில்லை!
நமக்கு

மாணவ பிள்ளைதாச்சிகள்.. கள்ளன்

வி. பிச்சுமணி
மாணவ பிள்ளைதாச்சிகள்..கள்ளன் போலீஸ் !
01.!
மாணவ பிள்ளைதாச்சிகள்!
-----------------------------!
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்!
ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும்!
குந்த இடமில்லாமல்!
முதுகில் புத்தகத்தை சுமந்து!
நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் !
முதுகு பைகள் கர்ணகவசம்!
கழற்றி வைக்கப்படுவதில்லை!
குந்திகளின் மூக்கை அறுக்கும்!
பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும் !
மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்!
மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம்!
கூட்டம் அதிகமாக இருந்தாலும்!
முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் !
இந்த கர்ணர்களை கண்டால்!
கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்!
இறக்கி கையில் வைக்க சொன்னால்!
ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் !
முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென!
தொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது !
!
02.!
கள்ளன் போலீஸ் !
------------------------- !
நிலவும் நானும்!
கள்ளன் போலீஸ் விளையாடினோம்!
நான் போலீசாக!
நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும்!
நிலவு போலீசாக!
நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன்!
இப்படி மாறி மாறி!
இரவெல்லாம் விளையாட்டு!
சூரியன் தன்னையும் விளையாட்டில்!
சேர்க்க சொல்லி சண்டையிட!
எங்கள் விளையாட்டை கலைத்தோம்!
மற்றொரு நாளில்!
விளையாடுகையில்!
நிலவு மேகத்தில் மறைந்து!
போக்கு காட்டியது!
அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
போதும் விளையாட்டு!
வெளியே வா என அழைக்க!
நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது!
நிலவு வடித்த கண்ணீர்!
எங்க ஊரு முழுவதும் மழையாக

தோல்வி

இரா சனத்
மாணவனுக்கு பரீட்சையில் தோல்வி!
மன்னனுக்கு ஆட்சியில் தோல்வி!
மங்கையருக்கு காதலில் தோல்வி!
மடையனுக்கு மகிழ்ச்சியும் தோல்வி!
அலட்சியத்தால் இலட்சியத்துக்கு தோல்வி !
அமைதியால் ஆணவத்துக்கு தோல்வி !
அடிமைத்தனத்தால் வீரத்திற்கு தோல்வி !
அறியாமையினால் அறிவுக்கு தோல்வி!
காலை பொழுதினிலே கங்கை கரையினிலே!
கன்னியர்கள் கவர்ச்சியாக நீராடுவதை கண்ட!
கதிரவனுக்கு முகில் கூட்டத்தால் தோல்வி!
முன்நோக்கி செல்வதற்கு முனையாமல்!
பின் நோக்கி நகர்வதற்கு முனையும்!
வீரத்தன்மையற்ற படைவீரர்களுக்கு !
போர்களத்தில் தோல்வி நிச்சயம் !
மக்கள் தேவையை நன்கு அறிந்து!
மக்களுக்கு சேவையாற்ற தவறும்!
அதிகாரமுடைய அமைச்சர்களுக்கு!
தேர்தலில் படு தோல்வி நிச்சயம்!
அன்னையை மதிக்காமல்!
ஆண்டவனை துதிக்காமல்!
அலட்சியமாய் வாழ்பவனுக்கு!
தொட்டதெல்லாம் தோல்வியாகும்!