மெல்லிய தாலாட்டாய்….!
விம்மி விம்மி!
வெளிவராது…!
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது!
பெருமூச்சு!!!!
விழி கீறி!
குபுக்கென வெளிவரப்பார்க்கும்!
நீர்த்துளி!
தணிக்கை செய்யப்படுகிறது!!!!
ஒட்ட வைத்த!
சிரிப்பு…!
உலர்த்தி!
வைத்த!
விழியோரங்கள்…!
என்ன!
வாழ்க்கை இது!!
இன்னும்!
ஏற வேண்டிய!
இலக்குகள்!
இதயம் பிராண்டும்!!!!
`நான்`!
எனக்கில்லாத!
அவலம்!
அவசரமாய்!
நினைவுக்கு வரும்!!!!
என் நேற்றுக்கள்….!
என் இன்றுகள்….!
என் நாளைகள்….!
யாரிடம்!
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???!
என்!
மெளனமே…!
என் செவிகளுக்கு!
இரைச்சலாயிருக்கிறது!!!
இறைவா!!!
எனக்கேன்!
இத்தனை `சிறகுகள்`தந்தாய்!
தங்கக் கூண்டில்!
அடைத்து விட்டு???!
!
-ஹயா ரூஹி!
மாவனல்லை, இலங்கை
ஹயா ரூஹி, மாவனல்லை