எல்லை.. ஒலிக்காத ஒலி - தஸ்லீமா நஸ் ரீன்

Photo by Tengyart on Unsplash

எல்லை!
-----------!
பிரக்ஞைக்கு திரும்பியதும்!
உலகை பார்க்க, நுகர, !
உணர, கேட்க வேண்டி !
வாசலைக் கடக்கையில்!
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்!
இந்தச் சுவர்களே உனது வெளி!
இந்த மேற்கூரை உனது வானம்!
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்!
இந்தத் தலையணைகள்!
இந்த வாசமிகு சோப்!
இந்த டால்கம் பவுடர்!
இந்த வெங்காயங்கள்!
இந்த ஜாடி, இந்த ஊசி!
மற்றும் இந்த நூல்!
மற்றும் பூ வேலைபாடுடை!
தலையணை உறைகள்!
இவைகள்தான் உனது வாழ்க்கை!
அடுத்தப் பக்கத்தில் !
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை!
எங்ஙனம் பார்ப்பது?!
பின்கேட்டை திறந்து கொண்டு !
போகும் அவள் !
போகாதே என தடுக்கப் படுகிறாள்.!
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்!
இந்த கீரையை, இந்த கொடியை!
அடிக்கடி கவனித்துக் கொள்!
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை!
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை!
இந்த தூய்மையான பசுமை பரப்பை!
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை!
இந்த மணம் வீசும் மண்ணை!
இவையணைத்தும் தான் !
உனது உலகம்.!
-----------------------!
ஒலிக்காத ஒலி!
!
எத்தனையோ பொருட்கள் ஒலிக்கின்றன!
உடலின் செல்கள்,!
நடனமாடுகையில் கொலுசுமணிகள்!
மணிக்கட்டில் வெள்ளி வளைகள்!
ஜன்னலில் மழைத்துளி விழவே!
தாளத்தோடு ஒலிக்கும் கண்ணாடிக் கதவுகள்!
மேகத்துடன் மேகம் மோதுகையில்!
மின்னல் ஒலிக்கிறது!
கனவுகள் ஒலிக்கிறது!
அவைகளின் தாள் நேரத்தையும் கவனிக்கிறது!
உள்ளுக்குள் அதிர்வேற்படுத்தும்!
தனிமை ஒலிக்கிறது!
எனது வீட்டில்!
பொறுத்தப் பட்டிருக்கும்!
அழைப்பு மணியைத் தவிர !
எல்லாம் ஒலிக்கிறது.!
------------------!
மொழிபெயர்ப்பு மதியழகன் சுப்பையா
தஸ்லீமா நஸ் ரீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.